Homeசெய்திகள்தமிழ்நாடுதூய்மைப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை, சான்றிதழ்களை வழங்கி முதலமைச்சர் பாராட்டு!

தூய்மைப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை, சான்றிதழ்களை வழங்கி முதலமைச்சர் பாராட்டு!

-

 

தூய்மைப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை, சான்றிதழ்களை வழங்கி முதலமைச்சர் பாராட்டு!
Photo: TN Govt

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டி.12) பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேங்கிய குப்பை மற்றும் தோட்டக்கழிவுகளை அகற்றும் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட 3,449 தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பிற பணியாளர்களுக்கு தலா 4,000 ரூபாய் என மொத்தம் 1 கோடியே 37 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கும் அடையாளமாக 15 தூய்மைப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினர்.

மாவீரனில் வாய்ஸ் ஓவர் கொடுத்தது விஜய் சேதுபதி…. அப்போ அயலான் பட ஏலியனுக்கு???

இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன், டாக்டர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் பரந்தாமன், ஜோசப் சாமுவேல், மூர்த்தி, எபினேசர், துணை மேயர் மகேஷ் குமார், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் கார்த்திகேயன், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

MUST READ