Homeசெய்திகள்தமிழ்நாடு"உலகக்கோப்பைக் கிரிக்கெட் இறுதிப் போட்டி- தடையில்லா மின்சாரம்": டான்ஜெட்கோ அறிவிப்பு!

“உலகக்கோப்பைக் கிரிக்கெட் இறுதிப் போட்டி- தடையில்லா மின்சாரம்”: டான்ஜெட்கோ அறிவிப்பு!

-

 

"உலகக்கோப்பைக் கிரிக்கெட் இறுதிப் போட்டி- தடையில்லா மின்சாரம்": டான்ஜெட்கோ அறிவிப்பு!
File Photo

நடப்பு உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி, குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இன்று (நவ.19) பிற்பகல் 02.00 மணிக்கு தொடங்குகிறது. உலகக்கோப்பையை வெல்ல இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

“பிரதமர் நரேந்திர மோடி எவ்வளவு முயற்சி செய்தாலும்……”- மல்லிகார்ஜுன கார்கே பேச்சு!

இந்தியாவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் இறுதிப்போட்டியைக் காண ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், கிரிக்கெட் போட்டியை பெரிய திரைகளில் காணும் வகையில் முக்கிய இடங்களில் பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனர்.

உலகக்கோப்பை இறுதிப்போட்டியை ஆஸ்திரேலிய துணை பிரதமருடன் இணைந்து நேரில் கண்டு ரசிக்க உள்ள பிரதமர் நரேந்திர மோடி!

அந்த வகையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் என்றழைக்கப்படும் டான்ஜெட்கோ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “உலகக்கோப்பைக் கிரிக்கெட் இறுதிப் போட்டியை எவ்வித இடையூறும் இன்றி கண்டுகளிக்க ஏதுவாக தடையில்லா மின்சாரம் வழங்கப்படும். தடையின்றி மின்சாரம் கிடைப்பதற்கு அயராது உழைத்து வருகிறோம். உலகக்கோப்பைக் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியாவின் வெற்றியை இணைந்துக் கொண்டாடுவோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ