சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் உலகக்கோப்பைக் கிரிக்கெட் போட்டி நடைபெறுவதை முன்னிட்டு, மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அலிப்பிரியிலிருந்து திருப்பதிக்கு பாதயாத்திரையாகச் சென்ற இயக்குநர் லோகேஷ் கனகராஜ்!
உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றில் நியூசிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகள் மோதும் போட்டி, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று (அக்.13) மதியம் 02.00 மணிக்கு நடைபெறவுள்ளது. இதனையொட்டி, போட்டியைப் பார்த்துத் திரும்பும் ரசிகர்களின் வசதிக்காக, சென்னை மெட்ரோ ரயில் சேவை இரவு 12.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
“அனைத்துத் துறைகளிலும் கவனம் செலுத்துகிறோம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
மேலும், கிரிக்கெட் ரசிகர்கள் போட்டி முடிந்து, திரும்பும் போது மட்டும் போட்டிக்கான டிக்கெட்டைக் காண்பித்து இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பயணிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து அரசினர் தோட்டம் ரயில் நிலையத்தில் இருந்து விமான நிலையம் மற்றும் விம்கோ நகர் பணிமனை நோக்கி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்றும், சென்ட்ரல் நிலையத்தில் இருந்து பரங்கிமலைக்கு 15 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் என்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் கூறியுள்ளது.