Homeசெய்திகள்தமிழ்நாடு"அவர்களை இழுத்துச் சென்றும், தூக்கிச் சென்றும் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“அவர்களை இழுத்துச் சென்றும், தூக்கிச் சென்றும் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

-

 

"அவர்களை இழுத்துச் சென்றும், தூக்கிச் சென்றும் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
Twitter Image

டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போராட்ட ஏற்பாட்டாளர்கள் மற்றும் வீரர், வீராங்கனைகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இன்று விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி- எப்12 ராக்கெட்!

இந்திய மல்யுத்த விளையாட்டு அமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ள வீராங்கனைகள், நாடாளுமன்ற புதிய கட்டிடம் அருகே கூட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர். ஜந்தர் மந்தரில் இருந்து பேரணியாக செல்ல முயன்ற வீரர்கள், வீராங்கனைகளை டெல்லி காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

அப்போது, தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், அனைவரையும் வாகனங்களில் ஏற்றி கைது செய்தனர். மொத்தம் 700 பேரை கைது செய்த காவல்துறையினர், அவர்களை வெவ்வேறு இடங்களுக்கு பேருந்துகளில் அழைத்துச் சென்றனர். பின்னர், வீராங்கனைகள் விடுவிக்கப்பட்ட நிலையில், மாலையில் வீரர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களையும் விடுவித்தனர்.

இதற்கு பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் சொல்லிப் பல மாதங்கள் ஆகிவிட்டன. அவர் மீது இதுவரை அக்கட்சியின் தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்து தலைநகரில் போராடி வருகிறார்கள்.

புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தைத் திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி!

இந்திய நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத் திறப்பு விழாவின்போது, போராட்டம் நடத்திய அவர்களை இழுத்துச் சென்றும், தூக்கிச் சென்றும் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது என்பதையே இது காட்டுகிறது. குடியரசுத் தலைவரையே புறந்தள்ளி, அனைத்து எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்புக்கும் ஆளாகி நடைபெறும் திறப்பு விழா நாளில் அராஜகமும் அரங்கேறுவதுதான் அறமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

MUST READ