
எல்.ஜி.எம். திரைப்படத்தின் தயாரிப்பாளரான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் விழாவில் கலந்து கொண்டு பேசிய விசயங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மெகா ஊழல்! கடப்பாரையை விழுங்கிய ஸ்டாலின்- எடப்பாடி பழனிசாமி
விழாவில் தோனி கூறியதாவது, “சென்னை சூப்பர் கிங்ஸிற்கு விசிலடிங்க. டெஸ்ட் கிரிக்கெட் அறிமுகம், அதிகபட்ச ஸ்கோரும் சென்னையில் தான். கடந்த 2008- ஆம் ஆண்டு ஐ.பி.எல். விளையாட வந்த போது சென்னை தன்னை தத்தெடுத்து கொண்டது. எப்போதும் தனது மனதில் சென்னைக்கு நீங்கா இடம் உள்ளது. அதன் காரணமாக, தங்களது படத் தயாரிப்பை தமிழில் தொடங்கியுள்ளோம்.
எல்.ஜி.எம். படம் மிகக்குறைந்த நாட்களில் எடுக்கப்பட்டது. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் கவனம் இருந்தாலும், அடிக்கடி மனைவியிடம் படத்தைப் பற்றி விசாரித்துக் கொண்டேன்” எனத் தெரிவித்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தனக்கு இடம் கிடைக்குமா? என நடிகர் யோகிபாபு எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த தோனி, “ராயுடு ஓய்வுப் பெற்றுவிட்டதால் சென்னை அணியில் உங்களுக்கு இடமுண்டு எனவும், அணி நிர்வாகத்தினருடன் பேச தயார்; ஆனால் அதற்கு தொடர் பயிற்சி செய்ய வேண்டும்” என்று யோகிபாபுவுக்கு அறிவுரை வழங்கினார்.
ஜி.எஸ்.டி. கூட்டத்தில் தமிழக அரசு முன் வைத்த கோரிக்கைகள்!
அதைத் தொடர்ந்து பேசிய தோனி, “தீபக் சாஹர் அருகில் இருந்தால், அவர் ஏன் இருக்கிறார் என தோன்றும், அருகில் இல்லையென்றால் ஏன் இல்லை என தோன்றும்” எனத் தெரிவித்துள்ளார்.