Homeசெய்திகள்தமிழ்நாடுஎம்பி துரை வைகோவின் லெட்டர் பேடை தவறாக பயன்படுத்திய இளைஞர் கைது

எம்பி துரை வைகோவின் லெட்டர் பேடை தவறாக பயன்படுத்திய இளைஞர் கைது

-

- Advertisement -

திருச்சி எம்பி துரை வைகோவின் லெட்டர் பேடை தவறாக பயன்படுத்தி ரயில் பயணம் மேற்கொள்ள EQ படிவம் கொடுத்த இளைஞர் கைது

கடந்த நவம்பர் மாதம் 21ம் தேதி  அன்று சென்னையிலிருந்து சங்கரன்கோவிலுக்கு பொதிகை எக்ஸ்பிரஸ்-சில் ஸ்டீபன் சத்யராஜ் என்ற பெயரில் செல்ல திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோவின் லெட்டர் பேடை பயன்படுத்தி EQ படிவம் ரயில்வே துறைக்கு சென்றுள்ளது. இதனை எடுத்து ரயில்வே நிர்வாகத்தினர் EQ வடிவத்தை ஏற்று ஸ்டீபன் சத்யராஜ் பெயரில் பயணம் மேற்கொள்ள அனுமதித்துள்ளனர்.

எம்பி துரை வைகோவின் லெட்டர் பேடை தவறாக பயன்படுத்திய இளைஞர் கைதுபின்னர் துரை வைகோ லெட்டர் பேடில் கொடுக்கப்பட்ட EQ படிவத்தின் உண்மை தன்மையை அறிய அதனை துரை வைகோவின் உதவியாளரான சங்கருக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனை அடுத்து சங்கர் இது குறித்து திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோவை தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் அது போன்ற கடிதம் எதுவும் கொடுக்காதது தெரிய வந்துள்ளது.

திருச்சி எம்பி துரை வைகோவின் லெட்டர் பேடை தவறாக பயன்படுத்திய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி எம்பியின் உதவியாளர் சங்கர் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தபால் மூலம் கொடுத்த புகாரைத் தொடர்ந்து  சம்பந்தப்பட்ட EQ படிவத்தில் கொடுக்கப்பட்ட பயணியின் செல்போன் என்னை டிரேஸ் செய்து பார்த்தபோது அது சங்கரன்கோவில் சங்கர்நகர் 2ம் வீதியைச் சேர்ந்த ராம்குமார் (30) என்ற இளைஞர் என்பது தெரிய வந்துள்ளது.

மேலும் அவர் சங்கரன்கோவிலில் கம்ப்யூட்டர் சென்டர் வைத்துள்ளதால் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோவின் லெட்டர் பேட்டை தவறாக பயன்படுத்தி EQ படிவம் மூலம் ஸ்டீபன் சத்யராஜ் என்ற பெயரில் சென்னையிலிருந்து சங்கரன் கோவிலுக்கு பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்தது தெரிய வந்ததைத் தொடர்ந்து ராம்குமாரை காரைக்குடியில் வைத்து கணேஷ் நகர் காவல் துறையினர் கைது செய்தனர்.

MUST READ