புழல் சிறையில் அடைக்கப்பட்டார் டிடிஎப் வாசன்
யூ டியூபர் டிடிஎப் வாசனுக்கு அக்டோபர் 3ம் தேதி வரை சிறை தண்டனை விதித்து காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் மாவட்டம், பாலுசெட்டிசத்திரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற யூடியூபர் டிடிஎஃப் வாசன் வீலிங் செய்ய முயன்ற போது, நிலைத்தடுமாறி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த அவர் மீது 5 பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். டிடிஎப் வாசன் மீது ஜாமினில் வெளிவர முடியாத பிரிவான IPC 308-ன்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளாது. இதையடுத்து அவரை இன்று கைது செய்த போலீசார், காஞ்சிபுரத்தில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அப்போது நான் ‘STUNT’ எதுவும் பண்ணவில்லை. தவறி விழும்போது வண்டி தூக்கிடுச்சு, நடந்தது எதிர்பாராத விபத்து, பைக்கில் இருந்து ஸ்லிப் ஆகி கீழே விழுந்து விட்டேன் என டிடிஎப் வாசன் நீதிபதியிடம் தெரிவித்தார். இதனை கேட்ட நீதிபதி இனியா கருணாகரன், டிடிஎப் வாசனை வரும் அக்.3ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து புழல் சிறையில் அடைக்க டிடிஎப் வாசனை போலீசார் அழைத்து சென்றனர்.