யூடியூபர் டிடிஎஃப் வாசனின் நீதிமன்றக் காவல், வரும் நவம்பர் 09- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு நவ.6- ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!
சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகே பைக்கில் வேகமாகச் சென்று விபத்தில் சிக்கிய யூடியூபர் டிடி எஃப் வாசனை, கடந்த மாதம் பாலுசெட்டிசத்திரம் காவல்துறையினர் கைது செய்தனர். புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டிடிஎஃப் வாசனின் நீதிமன்றக் காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அவரது காவல் முடிவுக்கு வரவிருந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் டிடிஎஃப் வாசன் சிறையில் இருந்த படி,காணொளி வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இனியா கருணாகரன், டிடிஎஃப் வாசனின் நீதிமன்றக் காவலை மேலும் 10 நாட்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.
வி.சி.க. பிரமுகர் விக்ரமன் மீது வழக்குப்பதிவுச் செய்த காவல்துறை!
வரும் நவம்பர் 09- ஆம் தேதி வரை அவரை நீதிமன்றக் காவலில் சிறையில் வைத்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.