Homeசெய்திகள்தமிழ்நாட்டிற்கு இன்றும் ரெட் அலார்ட்

தமிழ்நாட்டிற்கு இன்றும் ரெட் அலார்ட்

-

ஃபெஞ்சல் புயல் கரையை கடந்துவரும் சூழலில் தமிழ்நாட்டிற்கு வானிலை ஆய்வு மையம் இன்றும் ரெட் அலார்ட் விடுத்துள்ளது.

ஃபெஞ்சல் புயல் நேற்று கரையை கடந்த போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஆகிய பகுதிகளில் மிதமாகவும் சில இடங்களில் பலத்த மழையும் பெய்தது. திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் 23.7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

சனிக்கிழமை மாலை பாண்டிச்சேரி வழியாக கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக புதுவையில் 47 செ.மீ. மழையும், விழுப்புரத்தில் 50 செ.மீ. மழையும் பெய்துள்ளது.

ஃபெஞ்சல் புயல் முழுமையாக இன்னும் கரையை கடக்கவில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்று (டிச 1) ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், திருவள்ளூர் மாவட்டத்தில் மிதமான மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

21 செமீ-க்கு அதிக மழை பொழிவிற்கு வாய்ப்பு என்பதால் இன்று சிகப்பு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

நாளை ஆரஞ்சு அலர்ட்

தமிழ்நாட்டில் நாளை (டிச 2) ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை 12 முதல் 20 செ.மீ வரை மழை பொழிவிற்கு வாய்ப்பு என்பதால் நாளை ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 3 நாட்கள் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அதனால் டிச 3 ஆம் தேதி மஞ்சள் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் கொடுத்துள்ளது.

MUST READ