Homeசெய்திகள்ஆசிரியர் கி.வீரமணியின் பிறந்தநாள்-முதலமைச்சர் வாழ்த்து

ஆசிரியர் கி.வீரமணியின் பிறந்தநாள்-முதலமைச்சர் வாழ்த்து

-

திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணியின் 91-வது பிறந்தநாள்-முதலமைச்சர் நேரில் சென்று வாழ்த்து

திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணியின் 91-வது  பிறந்தநாள்-முதலமைச்சர் பிறந்தநாள் வாழ்த்துதிராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணியின் 91-வது பிறந்தநாள் இன்று. அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க அடையாற்றில் உள்ள இல்லத்திற்கு முதலமைச்சர் முக.ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் ஆகியோர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.

பின்பு செய்தியாளர்களை சந்தித்த கி.வீரமணி  91 வது பிறந்த நாளில் இந்தியாவிற்கு வழிகாட்டக்கூடிய புதிய இந்தியாவிற்கு பாதுகாவலராக இருக்கக்கூடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அமைச்சர்களுடன் வந்து நேரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். இது மேலும் எனக்கு உற்சாகத்தை தெரிகிறது.திராவிட இயக்கம் அறிவாசான் ந்தை பெரியார் அவர்களின் வழியிலே பெரியாரின் கொள்கையை செயல்படுத்துகிற நேரத்தில் எங்களுடைய இலக்கு பெரியாரை உலகமயமாக்க வேண்டும் . உலகம் பெரியார் மையம் ஆக்க வேண்டும்.பெரியார் என்பது தனி மனிதர் அல்ல தத்துவங்கள்.

திராவிடம் என்பதற்கு ஒரு குறுகிய விளக்கம் சொல்ல அவசியமில்லை;
மனித குலம் எங்கெங்கெல்லாம் ஒடுக்கப்படுகிறது அங்கெல்லாம் போராடி உரிமைகளை பெற்று தந்து புதிய சமத்துவத்தை உருவாக்குவது தான், திராவிடர் கழக இயக்கம்.இப்போது நடைபெறுகிற தேர்தலிலே திராவிட இந்தியாவிற்கும், இந்தியா என்பது ஒரு கூட்டணியாக உருவாகியிருக்கிறது உங்களுக்கு தெரியும்- இந்துத்துவ மதவெறி இந்தியாவிற்க்கும் இடையே நடைபெறக்கூடிய போராட்டமாக பெரியாருடைய கண்ணோட்டத்திலே இது மிகப்பெரிய அளவுக்கு கொள்கை போராட்டம். சிறப்பாக உழைப்பதற்கு எல்லோரும் தயாராக வேண்டும் இதுவே என்னுடைய பிறந்தநாள் விழா செய்தியாகும்.

திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணியின் 91-வது  பிறந்தநாள்-முதலமைச்சர் பிறந்தநாள் வாழ்த்து

முதலமைச்சர் எனக்கு வாழ்த்து சொன்ன போது நான் அவரிடம் இரண்டு செய்திகள் முக்கியமானதாக வந்திருக்கிறது என்றேன்.ஒன்று , ஆளுநர் அரசியல் சட்டத்தையே புரியாமல் முழுக்க முழுக்க அரசியல் சட்டத்தின் 200 விதிக்கு மாறாக தனக்கு நிறைவேற்றி அனுப்பப்படுகிற மசோதாக்களை நிறுத்தி வைத்து. உச்ச நீதிமன்றம் வழக்கு தொடர்ந்த உடனே உச்ச நீதிமன்றம் கூறியதற்கு பிறகு கூட மீண்டும் மசோதாக்களை குடியரசு தலைவருக்கு அனுப்பியுள்ளார்.

ஆளுநர்க்கு அரசியல் சட்டம் தெரியவில்லை என்று மறைமுகமாக சுட்டிக் காட்டி இருக்கிறார்.68 பிரிவின்படி ஆளுநர் என்பது தமிழ்நாடு ஆட்சியினுடைய ஒரு அங்கம் தான். 200 வது விதிப்படி இரண்டாவது முறை நிறைவேற்றப்பட்ட சட்டங்களை அப்படியே ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். ஆனால் மாறாக ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு எதற்க்கு அனுப்புகிறார் என்று தெரியாமலே அனுப்புகிறார். ஏட்டிக்கு போட்டியாக செய்கிறார்.இந்தியாவிற்கே திராவிட மாடல் ஆட்சி புதிய தீர்வை அரசியல் சட்ட ரீதியாக உருவாக்கியிருக்கிறது என்பது ஒரு செய்தி.

அமலாக்கத்துறை என்பது வானளாவிய அதிகாரம் இருக்கிறது என்ற எண்ணத்தில் மிதந்து கொண்டிருக்கிறது. மதுரையில் பல கோடி கேட்டு சில லட்சம் லஞ்சம் வாங்கி பிடிபட்ட அமலாக்கத்துறை அதிகாரியை மாநில அரசின் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்து உள்ளனர்.மாநில சுயாட்சி அங்கத்தில் இது மிக முக்கியமானது.திராவிட இயக்கம் திராவிட ஆட்சிக்கு கிடைத்திருக்கிற மிகப்பெரிய வாய்ப்புகள் திராவிட ஆட்சி சட்டப்படி நடக்கிற ஆட்சி நேர்மையாக நடக்கிற ஆட்சி.

திராவிட ஆட்சியில் சட்டப்படி நடப்போமே தவிர சட்டத்துக்கு விரோதமாக நடக்க மாட்டோம். இதை மக்கள் போராட்டமாக நடத்துவதை விட சட்ட போராட்டமாக ஆக்குவோம் என்று சொன்ன முதல்வர்க்கும் இந்த ஆட்சிக்கும் கிடைத்திருக்கிற வெற்றி. இதையே நான் பிறந்தநாள் வாழ்த்து பரிசாக கருதுகிறேன் என்றும் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

MUST READ