Homeசெய்திகள்வீட்டை காலி செய்யாததால் படிக்கட்டுகளை இடித்த உரிமையாளர்

வீட்டை காலி செய்யாததால் படிக்கட்டுகளை இடித்த உரிமையாளர்

-

ஆறு மாதங்களாக வாடகை செலுத்தாததால் வீட்டிற்கு செல்லும் மாடி படிகட்டுகளை வீட்டின் உரிமையாளர் இடித்து தரைமட்டமாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டை காலி செய்யாததால் படிக்கட்டுகளை இடித்த உரிமையாளர்காஞ்சிபுரம் விளக்குடி கோயில் தெருவை சேர்ந்த சீனிவாசன் அப்பகுதியில் ஆப்செட் நிறுவனம் நடத்தி வருகிறார். அவருக்கு காஞ்சிபுரம் கலெக்டர் ஆபீஸ் எதிரில் உள்ள வானவில் நகரில் சொந்தமாக வீடு உள்ளது.

வீட்டை காலி செய்யாததால் படிக்கட்டுகளை இடித்த உரிமையாளர்அந்த வீட்டின் மேல் மாடியில் வேணுகோபால் என்பவர் தனது மனைவி லீலா,தம்பி பாபு மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். உடல் நலக்குறைவு ஏற்பட்ட வேணுகோபால் பக்கவாதம் நோயால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே இருந்து வருகிறார்.

வீட்டை காலி செய்யாததால் படிக்கட்டுகளை இடித்த உரிமையாளர்இதனால் அவரால் முறையாக வாடகை செலுத்த முடியாமல் போனது. மாதம் ரூ.6,000 வீதம் 5 மாதங்களுக்கு மேல் வாடகை செலுத்தாமல் இருந்ததால் வீட்டை காலி செய்யக்கோரி வீட்டு உரிமையாளர் சீனிவாசன் நிபந்தனை விதித்துள்ளார்.

இதனிடையில் வேணுகோபாலின் தம்பி பாபு வழக்கறிஞர் உதவியுடன் வாடகை செலுத்த கால அவகாசம் கேட்டதாக தெரிகிறது. ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமையை இழந்த சீனிவாசன் காலை 6 மணி அளவில் கட்டிட பணியாளர்கள் 10 பேருடன் வீட்டின் மாடிக்கு செல்லும் படிகட்டுகளை இடித்து தரைமட்டமாக்கினார்.

வீட்டை காலி செய்யாததால் படிக்கட்டுகளை இடித்த உரிமையாளர்இதனால் வீட்டை விட்டு கீழ இறங்கி வர முடியாத நிலையில் வேணுகோபாலின் குடும்பத்தினர் இதுகுறித்து காவல் துறையினருக்கு புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் வீட்டில் சிக்கிக் கொண்டவர்களை பத்திரமாக மீட்டனர். வீட்டின் மாடி படிகட்டுகளை இடித்த வீட்டின் உரிமையாளரிடம் போலீசார் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ