Homeசெய்திகள்கோப்புகளை மஞ்சப்பையில் எடுத்து சென்ற காவல்துறை அதிகாரிகள்

கோப்புகளை மஞ்சப்பையில் எடுத்து சென்ற காவல்துறை அதிகாரிகள்

-

ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் மாநாட்டிற்கு கோப்புகளை மஞ்சப்பையில் எடுத்து சென்ற காவல்துறை அதிகாரிகள்

சென்னை  தலைமைச்செயலகத்தில் கலெக்டர்கள், காவல்துறையினர் மற்றும் மாவட்ட வனத்துறை உயர் அதிகாரிகளுக்கான மாநாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 3ம் தேதி நடந்தது. இந்த மாநாட்டில் பங்கேற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎப்எஸ் அதிகாரிகள் கோப்புகளை மஞ்சள் பையில் எடுத்துச்சென்றனர்.

கோப்புகளை மஞ்சப்பையில் எடுத்து சென்ற காவல்துறை அதிகாரிகள்

இக்கூட்டத்தில் ‘சுற்றுச்சூழலை பாதுகாக்க மஞ்சப்பை பயன்படுத்தி விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்’ என்று அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார். அதன்படி, காவல்துறையினர் கோப்புகள் அடங்கிய மஞ்சப்பை எடுத்து செல்லும் படத்தை சுற்றுச்சூழல் செயலர் சுப்ரியா சாஹூ தனது டிவிட்டரில் பதிவிட்டு,  “சென்னையில் நடந்து வரும் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறையினர் மற்றும் மாவட்ட வனத்துறை அதிகாரிகளின் மாநாட்டிற்கு வரும் காவல்துறையினரிடம் உள்ள முக்கிய கோப்புகளை சுமக்கும் இந்த மஞ்சப்பை, பிளாஸ்டிக் பைகளின் தாக்கத்தில் இருந்து பூமியை பாதுகாக்க ஒரே வழியாகும். பூமிக்கு உகந்த மஞ்சப்பையை அனைவரும் பயன்படுத்த உறுதி கூறுங்கள்“ என்று அறிவுறுத்தியிருந்தார்.

MUST READ