ஆவடி அருகே நெமிலிச்சேரி வெளிவட்டச் சாலையில் ஓடும் லாரியிலிருந்து திடீரென்று கழன்று அதிவேகமாக ஓடி வந்த லாரி டயர் அதிர்ஷ்டவசமாக நூல் இழையில் உயிர்தப்பிய இரு பெண்கள் அலறியடித்து ஓடும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் விஷால். இவர் கடந்த 5ம் தேதி குஜராத்தில் இருந்து புறப்பட்டு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள கண்ணாடி தொழிற்சாலைக்கு வேதிப்பொருட்கள் நிரப்பி கொண்டு வந்துள்ளார். இந்த நிலையில் இன்று தொழிற்சாலையில் வேதிப்பொருட்களை சேர்த்துவிட்டு மீண்டும் குஜராத்தை நோக்கி புறப்பட்டுள்ளார். நேற்று இரவு லாரி வெளிவட்ட சாலையில் நெமிலிச்சேரிஅருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென லாரியின் இடது பக்க டயர் வாகனத்திலிருந்து திடீரென்று கழன்று ஓடி உள்ளது. இதனையடுத்து சுதாரித்துக் கொண்ட ஓட்டுனர் விஷால் வாகனத்தினை விபத்து ஏதும் ஏற்படாமல் 100 மீட்டர் லாவகமாக பாலவேடு சுங்கச்சாவடி முன்னால் ஓரம் கட்டி நிறுத்தியுள்ளார். இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சிசிடிவி காட்சியில், லாரியின் டயர் கயன்று வேகமாக வருகிறது. அப்போது சாலை ஓரமாக இரண்டு பெண்கள் நடந்து செல்கிறார். அவர்களுக்கு நடுவில் சென்று நடைபாதை மீது மோதி காற்றில் காகிதம் பரப்பது போல் டயர் பறந்து செல்கிறது. இதனைத் தொடர்ந்து அருகில் இருந்த மற்றொரு டீ கடை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று இரு சக்கர வாகனங்கள் மீது டயர் மோதியதை கண்ட வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். லாரியில் இருந்து கழன்று பறந்து வந்த அந்த டயர் டீக்கடை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று வாகனங்களை மீது விழுந்ததால் வாகனங்கள் படும் சேதமடைந்தது. இதுகுறித்து பட்டாபிராம் போக்குவரத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்த பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த பட்டாபிராம் உதவி ஆய்வாளர் ரகுபதி இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சாலையில் சென்று கொண்டிருந்த லாரியிலிருந்து டயர் திடீரென கழன்று வந்து மோதி விபத்து ஏற்படுத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.