வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடியில் நாளை முதல் ரயில் சேவை துவங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது
திருநெல்வேலி – திருச்செந்துார் ரயில்வே பிரிவில் கனமழை, வெள்ளம் பாதிப்பை தொடர்ந்து ரயில் பாதை சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
இதனால் திருநெல்வேலி – செங்கோட்டை, செங்கோட்டை – திருநெல்வேலி, வாஞ்சி மணியாச்சி – திருச்செந்துார், திருநெல்வேலி – நாகர்கோவில், துாத்துக்குடி – திருநெல்வேலி, ஈரோடு – திருநெல்வேலி ஆகிய முன்பதிவில்லாத ரயில்கள் அனைத்தும் (டிச.,21) ரத்து செய்யப்பட்டன.
துாத்துக்குடியில் இருந்து புறப்பட வேண்டிய மைசூர் எக்ஸ்பிரஸ் விருதுநகரில் இருந்தும், தூத்துக்குடி- சென்னை முத்துநகர் எக்ஸ்பிரஸ் மதுரையில் இருந்தும் புறப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடியில் நாளை முதல் ரயில் சேவை துவங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.திருச்செந்தூரில் தண்டவாளங்களில் நீரை அகற்றும் பணி நடப்பதால் ஒரு வாரத்திற்கு பின் ரயில் சேவை துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.