Homeசெய்திகள்டொனால்ட் டிரம்ப் அதிரடி... தூக்கம் இழக்கும் பாகிஸ்தான்: சீனாவுக்கும் சிக்கல்

டொனால்ட் டிரம்ப் அதிரடி… தூக்கம் இழக்கும் பாகிஸ்தான்: சீனாவுக்கும் சிக்கல்

-

அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் தற்போது தனது அரசாங்கத்தின் முக்கிய பதவிகளுக்கு நியமனம் செய்து வருகிறார். டிரம்ப் பெரும்பாலான பெரிய பதவிகளுக்கான பெயர்களை அறிவித்துள்ளார், இதன் காரணமாக அவரது நிர்வாகத்தின் நிலைப்பாடு தெளிவாகியுள்ளது.அமெரிக்க

சில முக்கிய பதவிகளில் டிரம்பின் நியமனம் பாகிஸ்தானின் பிரச்சனைகளை அதிகரித்து வருகிறது. இதில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் பெயர்கள் குறிப்பாக அறிவிக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தானின் அரசியல் விமர்சகர் கமர் சீமா, அமெரிக்காவின் புதிய அரசாங்கம் தனது நாட்டுக்கு பிரச்சினைகளை உருவாக்கலாம் என்று கூறியுள்ளார்.

டொனால்ட் டிரம்பின் புதிய நிர்வாகம் குறித்து கமர் சீமா தனது வீடியோ ஒன்றில் பேசுகையில், ‘டொனால்ட் டிரம்ப் தனது வெளியுறவு அமைச்சராக மார்கோ ரூபியோவை தேர்வு செய்துள்ளார். மார்கோ மிகத் தெளிவாக இந்தியாவுக்கு ஆதரவாகவும், பாகிஸ்தானுக்கு எதிராகவும் இருப்பவர். பாகிஸ்தானுக்கு எதிராகவும், இந்தியாவுக்கு ஆதரவாகவும் கடந்த காலங்களில் சில திட்டங்களையும் கொண்டு வந்துள்ளார். இது வரும் காலங்களில் அமெரிக்காவில் இந்தியாவின் செல்வாக்கு அதிகரித்து பாகிஸ்தானின் நிலை பலவீனமடையும் என்பதையே காட்டுகிறது.

மார்கோ வெளியுறவுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றதும், அவரது கொள்கைகள் செயல்படுத்தப்படும் என்பது வெளிப்படை. அவர் எடுக்கும் நிலைப்பாடு பாகிஸ்தானுக்கு சிக்கலை ஏற்படுத்தும். இவ்வாறான நிலையில், வெளியுறவுக் கொள்கையின் அடிப்படையில் பாகிஸ்தானுக்கு இனிவரும் காலங்கள் கடினமாக இருக்கலாம் என்பதை மறுக்க முடியாது.

Imran Khan

மார்கோ, பாகிஸ்தானுக்கு மட்டுமின்றி சீனாவுக்கும் எதிரானவர். நிபந்தனையின்றி இஸ்ரேலை ஆதரித்து வருகிறார். அவரது இந்த நிலைப்பாடு பாகிஸ்தானுக்கும் சிக்கலை உருவாக்கும். மார்கோ மட்டுமல்ல, டிரம்பின் என்எஸ்ஏ மைக் வால்ட்ஸும் பாகிஸ்தானுக்கு எதிரானவர். எனவே அவரைப் பற்றியும் கவலைகள் இருக்கின்றன’’ என சீமா கூறினார்.

 

MUST READ