Homeசெய்திகள்லாட்டரியால் வந்த வினை:மனைவியை கொன்ற கணவன் தற்கொலை:

லாட்டரியால் வந்த வினை:மனைவியை கொன்ற கணவன் தற்கொலை:

-

பொள்ளாச்சியில் மனைவியை கொன்ற கணவன் தற்கொலை

பொள்ளாச்சி அடுத்துள்ள ஜமீன் ஊத்துக்குளி பகுதியில் உள்ள சென்னியப்பா பிள்ளை என்பவரது தோட்டத்தில் வேலை செய்து வருபவர் காளிமுத்து (65), இவரது மனைவி ராஜேஸ்வரி (60). இந்த நிலையிலே கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கோவையில் கணவருடன் வசித்து வரும் ராஜேஸ்வரி அவரது மகளான கவிதாமணி என்பவர் வீட்டிற்கு சென்று அங்கு தங்கி ஒன்பது மாதங்களாக அருகே உள்ள சுகுணா என்ற தனியார் பள்ளியில் ஆயாவாக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று கணவர் காளிமுத்து தனது மகளின் வீட்டிற்கு சென்று மனைவியிடம் சமாதானம் பேசி சேர்ந்து வாழலாம் என கூறி பொள்ளாச்சி பகுதிக்கு அழைத்து வந்துள்ளார். ஆனால் மீண்டும் நேற்று இரவு 9 மணிக்கு மேல் இருவருக்குள் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கணவர், மனைவி ராஜேஸ்வரியை தாக்கி தலைகாணியை முகத்தில் வைத்து கொலை செய்து அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மேற்கு காவல் நிலைய போலீசார் காளிமுத்து மற்றும் ராஜேஸ்வரி அவரது உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பொள்ளாச்சியில் மனைவியை கொன்ற கணவன் தற்கொலை ...முதல்கட்ட விசாரணையில் லாட்டரி சீட்டு வாங்கிய காளிமுத்துவை, அவரின் மனைவி ராஜேஷ்வரி கண்டித்ததனால் தகராறு ஏற்பட்டது தெரியவந்தது. லாட்டரி சீட்டு வாங்கி அதிக தொகை இழந்ததாக தெரிகின்றது. காளிமுத்து , ராஜேஷ்வரி கூலி வேலைக்கு சென்று ஈட்டிய  தொகையில் அதிகளவு லாட்டரி வாங்கியதனால் நடந்த சண்டை கொலை, தற்கொலையில் முடிந்தது. உறவினர்களை சோகத்தில் தத்தளிக்கவைத்திருக்கின்றது.

MUST READ