Homeசெய்திகள்‘ரஜினிக்கு விஜய் செய்த துரோகங்கள்...’: ஆதாரமின்றி அடுக்கப்பட்ட பட்டியல்

‘ரஜினிக்கு விஜய் செய்த துரோகங்கள்…’: ஆதாரமின்றி அடுக்கப்பட்ட பட்டியல்

-

- Advertisement -

விஜய்- ரஜினி ரசிகர்கள் மோதல் இப்போது உச்சம் தொட்டு இருக்கிறது. ரஜினி இடத்தை பிடிக்க விஜய் ஆர்வம் காட்டுவதாக வந்த விவாதத்தை அடுத்து காக்கா, பருந்து குட்டிக்கதைகளை சொல்லி தங்களது ரசிகர்களுக்கு மோதலுக்கு தீ மூட்டி வந்தனர் ரஜினியும், விஜயும். இப்போது விஜய் அரசியலில் களமிறங்க அந்த மோதல் இன்னும் கொளுந்து விட்டு எரிந்து வருகிறது.

இதனிடையே ரஜினிக்கு விஜய் சார்பில் செய்யப்பட்ட துரோகங்களை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் அவரது ரசிகர் ஒருவர். அதில், ‘‘பாபா சரியாக போகவில்லை என பார்ட்டி வைத்தவர் விஜய். சந்திரமுகி வசூலை தாண்டிவிட்டோம் என வாய்கூசாமல் பத்திரிக்கையாளர்கள கூப்பிட்டு சொன்னவர் விஜய்.த.வெ.க கட்சி கொடியை அறிமுகப்படுத்திய விஜய்..... வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்!

லிங்கா படம் வெளியான 2வது நாளே ஒரு விநியோகஸ்தர்களை தூண்டிவிட்டு நஷ்டம் என சொல்ல வைச்சது… லிங்கா படம் வெளியான சமயத்தில் புதுசா கட்சி ஆரம்பிச்ச ஒரு இயக்குநர்/நடிகரை படவாய்ப்பு தருவதாகச் சொல்லி ரஜினிக்கு எதிராக தொடர்ந்து பேச வைச்சது…

ஒரு தொலைக்காட்சியின் காமெடி நிகழ்ச்சியில், தான் நடித்த படத்தை வைவச்சு காமெடி செய்வதற்காக அவர்களிடம் லொள்ளு செய்து மிரட்டி, பின்னர் சமரசமாக நாளைய சூப்பர் ஸ்டார் அவார்டு கொடுக்க வைத்தது…

ஒரு வார இதழோடு சேர்ந்து போலி சர்வே மூலமாக நாளைய சூப்பர் ஸ்டார் நாடகம் போட்டது.
பட விளம்பர நிகழ்ச்சிகளில் சிலரை வைத்து சூப்பர் ஸ்டார் என சொல்ல வைத்து ரசித்தது.
ஏற்றிவிட்ட ஏணியை மறந்து சில கோமாளிகளுடன் சேர்ந்து ஆட்டம்போட்டது…
சினிமாவிலும், மேடைகளிலும் சுயமாக சிந்திக்காமல் தலைவர் ரஜினியை காப்பி அடிப்பது…

தலைவர் ரஜினியை வந்து சந்திக்கும் அரசியல்வாதிகளை தேடித்தேடி போய் பார்த்து விளம்பரம் தேடுவது… ரஜினி அரசியலுக்கு வரேன்னு சொன்னதும், அவரை விமர்சனம் செய்த அரசியல்வாதிகளுக்கு சொம்படித்தது… அரசியல்வாதிகள் ரஜினியை வீழ்த்தினால், நம்ம பெரிய ஆளாகிவிடலாம்னு தப்புக்கணக்கு போட்டது…

சக போட்டியாளர்களிடமும், அடுத்த தலைமுறை நடிகர்களிடமும் பல முறை தோற்று, அவர்களை ஜெயிக்க முடியாத போதும் ரஜினிய முந்திட்டோம் ரஜினிய முந்திட்டோம்னு அழுது புலம்புவது… சில சமூகவலைதள கைக்கூலிகளுக்கு காசு கொடுத்து தொடர்ந்து அவதூறு வீடியோ போடவைப்பது… எப்பவும் தன்னோட சமூகவலைத்தள கைக்கூலிகளை வைத்து தலைவர் ரஜினிக்கு எதிராக தொழில்ரீதியாக மட்டுமல்லாமல், தனிப்பட்ட முறையிலும் சமூக வலைத்தளங்களில் கேவலமான முறையில் வன்மத்தை பரப்புவது…சீமானெல்லாம் ஒரு ஆளேயில்லை, அவருக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமும் இல்லை - தவெக நிா்வாகி விமர்சனம்

சில ஊடகத்தினரை வைத்துக்கொண்டு தலைவர் ரஜினி செல்லும் இடத்திலெல்லாம் மைக்க நீட்டி, தன்னைப் பற்றி கேள்வி கேட்க வைத்து வாழ்த்து வாங்குவது… எல்லாத்துக்கும் மேல ஒரு தலைமுறையையே ரஜினி ரசிகன்னு நம்ப வச்சு அவங்க ஆதரவில் மேல வந்து, தனக்காக சிலர் சேர்ந்ததும் தலைவர் ரஜினியை வீழ்த்த பல வருடமாக சூழ்ச்சி செய்து, தலைவர் ரஜினிக்கும், ரஜினி ரசிகர்களுக்கும் துரோகம் செய்தது… இது எல்லாத்தையும் மறக்கவும் மாட்டோம். மன்னிக்கவும் மாட்டோம்’’ எனத் தெரிவித்துள்ளார்.

 

MUST READ