Homeசெய்திகள்பூனைக்கு முடி வெட்ட வாசிம் அக்ரம் கொடுத்த ரூ.1,82,858: பசியில் துடிக்கும் பாக்., மக்கள்

பூனைக்கு முடி வெட்ட வாசிம் அக்ரம் கொடுத்த ரூ.1,82,858: பசியில் துடிக்கும் பாக்., மக்கள்

-

பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா இடையே ஒருநாள் போட்டித் தொடர் நடந்து கொண்டிருந்தபோது, ​​வாசிம் அக்ரம் வர்ணனை செய்து கொண்டுனிருந்தார். 22 ஆண்டுகளுக்குப் பிறகு, வாசிம் அக்ரமின் நாட்டு அணி, ஆஸ்திரேலியாவை ஒருநாள் போட்டிகளில் தோற்கடித்தது. தொடரை 2-1 என வென்றபோது, ​​வாசிம் அக்ரம் தனது பேச்சால் பரபரப்பை ஏற்படுத்தினார்.


பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அக்ரம் வர்ணனையின் போது ஒரு விஷயத்த கூறியது ஆச்சர்யமாக இருந்தது. வர்ணனையின் போது அவர் தனது பூனைக்கு முடி வெட்ட ஆயிரம் டாலர்களை செலவழித்ததாக கூறினார். பாகிஸ்தானில் இதன் மதிப்பு தற்போது ரூ.182858 ஆக உள்ளது. இது குறைத்த அவரது வீடியோவில், ‘‘நான் நேற்று என் பூனையின் முடியை வெட்டினேன். இதற்காக நான் 1000 ஆஸ்திரேலிய டாலர்களை செலவிட வேண்டியிருந்தது.

அவர்கள் பூனைக்கு மயக்க மருந்து கொடுக்க வேண்டும். பூனையை வைத்திருக்க வேண்டும், பின்னர் உணவளிக்க வேண்டும் என்று என்னிடம் கூறினர். இந்தப் பணத்தில் பாகிஸ்தானில் சுமார் 200 பூனைகளின் முடியை வெட்டலாம் என்று சொன்னேன்’’ எனத் தெரிவித்தார். அவர் கூறியது மற்ற வர்ணனையாளர்களை ஆச்சர்யப்படுத்தியது.

பாகிஸ்தான் மக்களால் இதை ஜீரணிக்கவே முடியாது. பாகிஸ்தானில், பருப்பு, அரிசி விலை உயர்ந்து, மக்கள் வாழ்வது கடினமாக உள்ளது. ஏழைகளின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மறுபுறம், வாசிம் அக்ரமின் இந்த வீடியோ ஆச்சர்யம் அளித்தது. வாசிம் அக்ரமியின் இரண்டாவது திருமணம் ஆஸ்திரேலியாவின் சமூக சேவகியான ஷனிரா தாம்சனுடன் நடந்தது.

மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது ஆஸ்திரேலிய அணி தனது முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளித்திருந்தது. ஆஸ்திரேலியாவின் முழு கவனமும் இந்தியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபியில் உள்ளது. இது நவம்பர் 22 முதல் தொடங்குகிறது.

MUST READ