சென்னை மற்றும் புதுச்சேரிக்கு கிழக்கே 180 கிமீ தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது. இப்புயல் தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (30.11.2024) இரவு 7 மணிக்கு சென்னை மற்றும் புதுச்சேரி இடையே மரக்காணம்/மகாபலிபுரத்தை மையமாக வைத்து கரையை கடக்க துவங்கும்.

அதனால் அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,செங்கல்பட்டு , விழுப்புரம் ,புதுச்சேரி, கடலூர் மாவட்டங்களில் பரவலாக மிககனமழை முதல் அதிதகனமழையும், குறுகிய நேரத்தில் தீவிர மழைக்கும் வாய்ப்பு உள்ளது.
தரைக்காற்றின் வேகமும், மழைப்பொழிவும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் படிப்படியாக அதிகரிக்கும். இன்று காலை 10 மணி முதல் மழையின் தீவிரம் அதிகரிக்கும்.
சென்னை முதல் புதுச்சேரி வரையிலான பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் தமிழ்நாடு அரசு தரப்பில் கேட்டுக் கொண்டுள்ளனர்.
வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் படிப்படியாக மழை துவங்கும் என்றும் இயற்கையுடன்
டெல்டாவெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.
அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு. ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் அடுத்த 3 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு. மேலும் கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய 10 மாவட்டங்களிலும் காரைக்காலிலும் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புதுவை மக்களுக்கு எச்சரிக்கை; வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்