Homeசெய்திகள்வானிலைசென்னையில் மீண்டும் ஆட்டத்தை துவங்கிய கனமழை

சென்னையில் மீண்டும் ஆட்டத்தை துவங்கிய கனமழை

-

- Advertisement -

சென்னை மற்றும் சென்னை புறநகரில் நள்ளிரவு முதல் பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. பல மாவட்டங்களுக்கு ஆரம்பப்பள்ளிகள் மட்டும் விடுமுறை.

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, நேற்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றதாகவும், இது இன்று மேற்கு – வடமேற்கு திசையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இலங்கை – தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் நள்ளிரவு சென்னையில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக அடையாறு  மந்தைவெளி ராயப்பேட்டை, நுங்கம்பாக்கம், அண்ணா சாலை சென்ட்ரல் எக்மோர் அண்ணா நகர் பெரம்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழையானது செய்து வருகிறது அதேபோல் சென்னையில் புறநகர் பகுதிகளான பம்பல் பல்லாவரம் போரூர் ஐயப்பன் தாங்கல் மதுரவாயில் பாடி போன்ற பகுதிகளிலும் மழை பெய்தது.

ஆவடி, அம்பத்தூர், திருநின்றவூர், தாம்பரம், பல்லாவரம் மற்றும் குரோம்பேட்டை ஆகிய இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

மேலும் டெல்டா மாவட்டங்களைப் பொறுத்தவரை இன்றும் நாளையும் கனமழை பெய்யும் எனவும். நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், தஞ்சாவூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இரண்டு நாட்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ