ஆவடியில் பலத்த காற்றுடன் கொட்டி தீரத்த மழை வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை.
தென்னிந்திய பகுதிகளின் மேல், நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது அதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மீண்டும் 5 நாட்களுக்குக்கு மழை பெய்ய வாய்ப்பு என்று சென்னை வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.
ஜூன் 13 முதல் 17 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று ஆவடி சுற்றுவட்டாரப் பகுதியான பட்டாபிராம், இந்து கல்லூரி, திருமுல்லைவாயல், காமராஜர் நகர், கோவில் பதாகை, திருநின்றவூர், நெமிலிச்சேரி, அம்பத்தூர், அயப்பாக்கம், ஆகிய பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய கனத்த மழை பெய்துள்ளது.
தொடர்ந்து பெய்த மழையால் ஆங்காங்கே சாலைகளில் நீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சாலைகளில் நீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக நிதானமாக செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.