Homeசெய்திகள்வானிலைதமிழ் நாட்டில் மீண்டும் மழை - வானிலை ஆய்வு மையம்

தமிழ் நாட்டில் மீண்டும் மழை – வானிலை ஆய்வு மையம்

-

வட உள் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டலம் மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தின் 15 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசியில் இன்று கனமழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் விருதுநகர், மதுரை, புதுக்கோட்டை, கரூர், திருச்சி , தஞ்சாவூர், உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த நான்கு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஏற்காட்டில் 10 செ.மீ ,வட புதுப்பட்டில் 9 செ.மீ ,ஆம்பூரில் 8 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

ஜமுனா, மரத்தூர், ஆர்கே பேட்டை, உதகை, நடுவட்டம் , கொடநாடு, வாணியம்பாடி, வால்பாறையில் தலா 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

கோத்தகிரி, காட்பாடி, சின்கோனா, சோளிங்கர், மேலாத்தூர், அம்முண்டியில் தல 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

MUST READ