Homeசெய்திகள்புதுச்சேரிக்கு பெரும் ஆபத்து; ஃபெஞ்சல் புயல் மையம் கொண்டு நீடித்து வருகிறது

புதுச்சேரிக்கு பெரும் ஆபத்து; ஃபெஞ்சல் புயல் மையம் கொண்டு நீடித்து வருகிறது

-

புதுச்சேரிக்கு அருகே புயல் நகராமல் கடந்த 6 மணி நேரமாக அதே இடத்தில் மையம் கொண்டு நீடித்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் புதுச்சேரிக்கு அருகே ஃபெஞ்சல் புயல் மையம் கொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரமாக புயல் நகராமல் அதே இடத்தில் மையம் கொண்டுள்ளது.

புதுச்சேரிக்கு அருகே, கடலூருக்கு 30 கிமீ வடக்கிலும், விழுப்புரத்திற்கு 40 கிமீ கிழக்கிலும், சென்னைக்கு 120 கிமீ தெற்கு – தென்மேற்கிலும் புயல் மையம் கொண்டுள்ளது

அடுத்த 6 மணி நேரத்தில் மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து வட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் ஃபெஞ்சல் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்க கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே வானிலை ஆய்வாளர் ஹேமா சந்திரன் விடுத்துள்ள அறிவிப்பில்

தற்போது FENGAL புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழ்ல்ந்து விழுப்புரம் மாவட்டத்தினுள் மிக மெதுவாக நகர்ந்து வருகிறது.

இதன் காரணமாக அடர் மேககுவியல்கள் விழுப்புரம் மாவட்டத்தில் காணப்படுகிறது. விழுப்புரத்தில் ஏற்கனவே தீவிர கனமழை பதிவான நிலையில், தற்போது மீண்டும் குறுகிய நேர தீவிர மழைப்பொழிவு பதிவாகி வருகிறது. மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். கடலூர் மாவட்டத்திலும் கனமழை தொடர்ந்து வருகிறது, #திருவண்ணாமலை, #கள்ளக்குறிச்சி உள்ளிட்ட வடக்கு உள் மாவட்டங்களிலும் கன முதல் மிககனமழை பதிவாகும்.

MUST READ