தமிழ்நாட்டிற்கு 3நாட்கள் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்று முதல் 3நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
12 – 20 செமீ மழைக்கு வாய்ப்பு உள்ளது என்பதால் ஆக – 12, 13, 14 ஆகிய 3நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை வடுத்துள்ளனர்.
மேலும், தமிழ்நாட்டிற்கு 2நாட்கள் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் ஆக – 15, 16 ஆகிய 2நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
7 முதல் – 11 செமீ வரையிலான மழைக்கு வாய்ப்பு என்பதால் ஆக – 15, 16 ஆகிய இரண்டு நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
அதானி குழும பங்குகள் 7% வீழ்ச்சி: ஹிண்டன்பர்க் அறிக்கையின் எதிரொலி
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.