Homeசெய்திகள்உலகம்இலங்கை அதிபர் தேர்தல் - அநுர குமார திசாநாயக வெற்றி

இலங்கை அதிபர் தேர்தல் – அநுர குமார திசாநாயக வெற்றி

-

- Advertisement -

இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுர குமார திசாநாயக வெற்றிபெற்றுள்ளார். அவர் நாளை நாட்டின் 9வது அதிபராக பதவி ஏற்றுக் கொள்கிறார்.

இலங்கை அதிபா் பதவிக்கு நேற்று நடைபெற்ற தோ்தலில் 75 சதவீத வாக்குகள் பதிவாகியது. வாக்குப்பதிவு முடிவடைந்த சில மணி நேரங்களிலேயே வாக்கு எண்ணும் பணி தொடங்கி விடிய விடிய நடைபெற்றது. இன்று காலை 7 மணி நிலவரப்படி, தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுர குமார திசாநாயக 50 சதவீத வாக்குகளை பெற்று முன்னிலை வகித்தார். இதனை தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா முன்னிலை பெற்றார்.

முதல் சுற்று முடிவில் அநுர குமார திசாநாயக 42 சதவீத வாக்குகளை பெற்று முன்னிலை வகித்தார். சஜித் பிரேமதாசா 34 சதவீத வாக்குகளை பெற்றிருந்தார். இலங்கை தேர்தலில் 50 சதவீத வாக்குகள் பெற்றால் மட்டுமே வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படும் என்பதால், 2வது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் 56 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை அநுர குமார திசாநாயக வெற்றார்.

இதனால் ஐக்கிய மக்கள் சக்தி தலைவா் சஜித் பிரேமதாசவை விட 10 சதவிகிதத்துக்கும் கூடுதலான வாக்குகளை பெற்றார்.  இதையடுத்து அநுர குமார திசாநாயக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. நாளை எளிமையான முறையில் பதவியேற்பு நடைபெற உள்ளதாகவும், அதில் அநுர குமார திசாநாயக இலங்கை அதிபராக பதவியேற்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

MUST READ