Homeசெய்திகள்உலகம்லெபனானில் பேஜர் கருவிகள் வெடித்து சிதறியதில் 12 பேர் பலி, 3000 பேர் படுகாயம்

லெபனானில் பேஜர் கருவிகள் வெடித்து சிதறியதில் 12 பேர் பலி, 3000 பேர் படுகாயம்

-

லெபனான் நாட்டில் பேஜர் கருவிகள் திடீரென வெடித்து சிதறியதில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும், 3,000 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே நடைபெற்று வரும் போரில், ஹமாஸ் அமைப்புக்கு லெபனானை சேர்ந்த ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பு ஆதரவு தெரிவித்து வருகிறது.மேலும் இஸ்ரேல் மீது அவ்வப்போது ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி வருகிறது.

காஸாவைக் குறி வைத்து கடும் தாக்குதல்!
File Photo

இந்த நிலையில், லெபனானில் நேற்று பிற்பகலில் ஹிஸ்புல்லா அமைப்பினர் மற்றும்
அரசு அதிகாரிகள் தகவல் தொடர்புக்காக பயன்படுத்தி வரும் பேஜர் கருவிகள் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறின. இதில் 12 பேர் உயிரிழந்ததாகவும்,  3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடை ந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த தாக்குதலில் லெபனானுக்கான ,ஈரான் நாட்டு தூதர் படுகாயம் அடைந்தார். இதேபோல் ஹிஸ்புல்லா அமைப்பை சேர்ந்த எம்.பி. மகன் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

காசா போர் காரணமாக ஹிஸ்புல்லா அமைப்பினர் செல்போன்களை தவிர்த்து, பேஜர் கருவிகளை பயன்படுத்தும் நிலையில், 5 மாதங்களுக்கு முன்பு ஹாங்காங்கை சேர்ந்த நிறுவனத்திடம் இருந்து அவற்றை ஹிஸ்புல்லா அமைப்பு கொள்முதல் செய்யபபட்டுள்ளதாகவும், அவற்றில் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்  வெடிக்க செய்துள்ளதாகவும் ஹிஸ்புல்லா அமைப்பு குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. எனினும் இந்த குற்றச்சாட்டுக்கு இஸ்ரேல் தரப்பில் இருந்து பதிலளிக்கவில்லை.

MUST READ