Homeசெய்திகள்உலகம்கலிஃபோர்னியாவில் களைகட்டும் 134 - வது ரோஜா அணிவகுப்பு

கலிஃபோர்னியாவில் களைகட்டும் 134 – வது ரோஜா அணிவகுப்பு

-

அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியா மாகாணத்தில் 134-வது ஆண்டு ரோஜா அணிவகுப்பு வருகிற 2 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றனர்.

கலிஃபோர்னியாவில் 60 ஆண்டுகளுக்கு மேலாக பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் ரோஜா அணிவகுப்பு நடத்தப்படுகிறது. அந்த வகையில் 134-வது ரோஜா அணிவகுப்பு வரும் ஜனவரி 2 ஆம் தேதி வரலாற்று சிறப்புமிக்க பசடேனா தெருக்களில் நடைபெற உள்ளது.

இதில் ரோஜா உள்ளிட்ட வண்ண மலர்கள், இயற்கை பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட 38 மிதவைகள் இடம் பெற உள்ளனர். தெற்கு கலிஃபோர்னியாவை சேர்ந்து ஏராளமான தன்னார்வலர்கள் இந்த அணிவிக்கப்பில் பங்கேற்க உள்ளனர்.

ஆண்டாண்டு காலம் நடைபெறும் இந்த ரோஜா அணிவகுப்பு வித்தியாசமான ஒன்று. இதற்கு நிகராக எந்த ஒரு அணி வகுப்பும் இதுவரை நடந்ததில்லை. இதில் இயற்கை பொருட்களைக் கொண்டு மட்டுமே மிதவைகள் தயாரிக்கப்படுகின்றது. ஆண்டுக்கு ஒரு முறை இந்த அணிவகுப்பு நடைபெறுவதால் அது ஒரு குடும்ப நிகழ்ச்சியாகவே திகழ்கிறது. இதில் பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டு மிதவைகளை அலங்கரிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.

அணிவகுப்புக்கு தயாராகிடும் வகையில் மிதவைகளை உருவாக்கும் பணியில் கலைஞர்கள் பலர் ஈடுபட்டுள்ளனர். இதில் அமெரிக்கா மட்டுமல்லாது நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட மலர்களும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

வண்ண வண்ண பூக்களால் கார், நத்தை, காண்டாமிருகம், வண்ணத்துப்பூச்சி, ஒட்டகச்சிவிங்கி, கார்ட்டூன் கதாபாத்திரங்கள், வடிவங்கள் வடிவமைக்கப்பட்டு அவற்றை மிதவைகளில் பொருத்தும் பணியும் நடைபெற்று வருகிறது.

புத்தாண்டை ஒட்டி நடைபெறும் இந்த அணிவகுப்பை ஏராளமானோர் கண்டுக்களிக்க உள்ளனர். இதற்கென பிரத்தியேக ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியானது ஜனவரி 3 ஆம் தேதி மதியம் நிறைவு பெறும் என விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

MUST READ