நேபாள நாட்டில் மர்ஸ்யாங்டி என்ற ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இந்தியர்கள் உள்ளிட்ட 14 பேர் உயிரிழந்தனர்.
நேபாள நாட்டின் பொக்காரா பகுதியிலிருந்து இன்று காலை காத்மாண்டு நோக்கி 40 பேரை ஏற்றிக்கொண்டு இந்திய பதிவெண் கொண்ட பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. தனாஹூன் மாவட்டத்தில் உள்ள மார்ஸ்யாங்டி ஆற்றின் அருகேயுள்ள சாலையில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, மலைப்பாதையில் இருந்து ஆற்றில் உருண்டு விழுந்தது.
இந்த கோர விபத்தில் தண்ணீரில் மூழ்கி இந்தியர்கள் உள்ளிட்ட 14 பயணிகள் உயிரிழந்தனர். தகவலின் பேரில் விபத்து பகுதிக்கு விரைந்து வந்த
மீட்புப்படையினர் மற்றும் உள்ளூர் காவல்துறையினர் தண்ணிரில் தத்தளித்த 16 பேரை பத்திரமாக மீட்டனர். மேலும் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டு மாயமானவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.