Homeசெய்திகள்உலகம்2024ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

2024ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

-

- Advertisement -

2024ஆம் ஆண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த விக்டர் ஆம்ரோஸ், கேரி ருவ்குன் ஆகிய இருவருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த விக்டர் ஆம்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ஆகிய இருவருக்கும் மருத்துவத்திற்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. மைக்ரோ ஆர்.என்.ஏ.வை கண்டுபிடித்ததற்காக இருவருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக நோபல் சபை வெளியிட்டுள்ள அறிவிப்பில், இவர்களுடைய கண்டுபிடிப்பு உயிரினங்கள் எவ்வாறு உருவாகின்றன மற்றும் செயல்படுகின்றன என்பதற்கு அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை நிரூபிக்கிறது என தெரிவித்துள்ளார்.

இதனிடையே, நாளை இயற்பியலுக்கான நோபல் பரிசும், நாளை மறுநாள் வேதியியலுக்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட உள்ளது. தொடர்ந்து, வரும் வியாழன் அன்று இலக்கியத்துக்கான நோபல் பரிசும், வெள்ளிக்கிழமை அன்று அமைதிக்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட உள்ளன.பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு வரும் 14ஆம் தேதி அன்று அறிவிக்கப்பட உள்ளது

MUST READ