Homeசெய்திகள்உலகம்குவைத் தீ விபத்து - 3 தமிழர்கள் உள்ளிட்ட 41 இந்தியர்கள் உயிரிழப்பு

குவைத் தீ விபத்து – 3 தமிழர்கள் உள்ளிட்ட 41 இந்தியர்கள் உயிரிழப்பு

-

குவைத் 6 மாடி குடியிருப்பில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீவிபத்தில் இதுவரை 3 தமிழர்கள் உள்ளிட்ட 41 இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் இதுவரை 49 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

குவைத் தீ விபத்து - 3 தமிழர்கள் உள்ளிட்ட 41 இந்தியர்கள் உயிரிழப்பு

குவைத்தில் என்.பி.டி.சி என்ற தனியார் கட்டுமான நிறுவனத்தில் ஏராளமான ஊழியர்கள் பணிப்புரிந்து வருகின்றனர். இந்த ஊழியர்கள் அகமதி மாகாணத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா போன்ற இந்தியாவை சேர்ந்தவர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை ஒரு வீட்டின் சமையல் அறையில் எதிர்பாராதவிதமாக திடீரென தீ பிடித்துள்ளது. அந்த தீ அடுக்குமாடி குடியிருப்பு முழுவதும் பரவியது. அதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. அதிகாலையில் பெரும்பாலானோர் தூக்கத்தில் இருந்ததால் பலர் படுக்கையிலேயே கருகி போனார்கள்.

குவைத் தீ விபத்து - 3 தமிழர்கள் உள்ளிட்ட 41 இந்தியர்கள் உயிரிழப்பு

புகை மூட்டம் காரணமாக பலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளனர். சிலர் தப்பித்து வெளியே ஓடி வந்தபோது வாயில் கதவுகள் அனைத்தும் அடைத்திருந்ததால் தீயில் மாட்டிக் கொண்டனர். சிலர் துணியை கட்டிக் கொண்டு மேலிருந்து குதித்து தப்பிக்க முயன்றுள்ளனர்.

இப்படி அனைத்து வகையிலும் முயன்று முடியாமல் தீயில் அகப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 49 பேர் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதில் 3 தமிழர்கள் உள்ளிட்ட 41 பேர் இந்தியர்கள் என்று கூறப்படுகிறது.

குவைத் தீ விபத்தில் தமிழர்கள் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்! (apcnewstamil.com)

தமிழ்நாடு முதலமைச்சர் இரங்கல்

https://x.com/mkstalin/status/1801075410891080034

இந்த தீ விபத்து குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, குவைத் தீ விபத்தில் இதுவரை 40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாக வந்த செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சிக்கும், வேதனைக்கும் உள்ளானேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

MUST READ