Homeசெய்திகள்உலகம்வங்கதேசத்தில் பயணிகள் ரயிலில் தீ விபத்து - 5 பேர் உடல் கருகி பலி

வங்கதேசத்தில் பயணிகள் ரயிலில் தீ விபத்து – 5 பேர் உடல் கருகி பலி

-

வங்கதேசத்தில் பயணிகள் ரயிலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 5 பேர் உடல் கருகி உயிரிழந்த நிலையில், ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.

அண்டை நாடான வங்கதேசத்தில், ஜெச்சூர் நகரில் இருந்து தலைநகர் டாக்கா நோக்கி பெனோபோல் எக்ஸ்பிரர் ரயில் சென்றுகொண்டிருந்தது. இந்த ரயிலில் நூற்றுக்கணக்கான பயணிகள் பயணம் செய்தனர். இந்த ரயில் வங்கதேசத்தை சேர்ந்த சிலர் இந்தியாவிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த ரயில் கோபிபாக் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென எதிர்பாராதவிதமாக ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் ரயிலில் பயணம் செய்த பயணிகள் அலறி துடித்தனர். ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதை அறிந்த ரயில் ஓட்டுநர் உடனடியாக அந்த ரயிலை நடு வழியில் நிறுத்தினார். இந்த தீயானது உடனடியாக 4 பெட்டிகளுக்கு பரவியது. அக்கப்பகத்தினர் உடனடியாக விரைந்து வந்து ரயிலில் சிக்கிக்கொண்டவர்களை மீட்டனர்.

இந்த விபத்தில் 5 சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உடனடியாக தீ விபத்து குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஏராளமானோர் இந்த தீ விபத்தில் படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது. அவர்களுக்கு டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

MUST READ