Homeசெய்திகள்உலகம்டிஜிட்டல் உலகிற்கான டிஜிட்டல் CONDOM! - பில்லி பாய் நிறுவன அறிமுகம்

டிஜிட்டல் உலகிற்கான டிஜிட்டல் CONDOM! – பில்லி பாய் நிறுவன அறிமுகம்

-

டிஜிட்டல் உலகிற்கான டிஜிட்டல் CONDOM! - பில்லி பாய் நிறுவன அறிமுகம்செல்போன்களில் ஹேக்கர்கள் கைவரிசை காட்டி  அந்தரங்க  தருணங்கள் மற்றும்  தனிப்பட்ட தகவல்களை திருடுவதும், உடன் இருப்பவர்க்கும் கூட தெரியாமல் ரெக்கார்ட் செய்யும் சம்பவங்களை தடுக்கும் விதமாக இந்த டிஜிட்டல் CONDOM கண்டுபிடித்துள்ளது.

பாலியல் உறவு கொள்ளும் சமயங்களில் புளூடூத் மூலம் ஸ்மார்ட்போன்களில் உள்ள கேமராக்கள், மைக்குகளை முடக்கும் வகையில் இந்த புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளனர். இதனை ஜெர்மனியைச் சேர்ந்த பில்லி பாய் என்ற ஹெல்த் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.

தற்போது ஆண்ட்ராய்டு கருவிகளில் மட்டும்  இந்த செயலி லாஞ்ச் செய்யப்பட்டுள்ளது.  ஸ்மார்ட்போன்ளில் சட்ட விரோத ஆடியோ மற்றும் வீடியோ ரெக்கார்டிங் ஆகாமால் தடுக்க இது உதவும்  என தெரிவிக்கின்றனர்.

இந்த செயலியை வைத்து இருப்பவர்கள் தனிமையில் இருக்க செல்லும் போது இந்த செயலியை ஆக்டிவேட் செய்தால் போதும். இந்த செயலி உடனடியாக உங்களின் ஸ்மார்ட் போன் கேமரா மற்றும் மைக்ரோன் செயல்பாடுகளை முடக்கி விடும் எனவும் யாரும் ஹேக் செய்து ரெக்கார்டிங் செய்ய முடியாது என்பதே  இதன் சிறப்பு.
இதுபோன்ற  அத்துமீறி வீடியோ பதிவு செய்தால் உடனடியாக செல்போனில் நீண்ட அலாரம் (Alarm) அடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இதுவரை 30க்கும் மேற்பட்ட நாடுகளில் இச்செயலி பயன்பாட்டுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டேன்டீ தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

MUST READ