Homeசெய்திகள்உலகம்தூக்கிலிடப்பட்டார் சிங்கப்பூர் வாழ் தமிழர்

தூக்கிலிடப்பட்டார் சிங்கப்பூர் வாழ் தமிழர்

-

தூக்கிலிடப்பட்டார் சிங்கப்பூர் வாழ் தமிழர்

கஞ்சா கடத்தல் வழக்கில் சிங்கப்பூர் வாழ் தமிழரான சுப்பையா தூக்கிலிடப்பட்டார்.

சிங்கப்பூரில் தமிழருக்கு தூக்கு
கடந்த 2013ம் ஆண்டு மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு சுமார் 1 கிலோ கஞ்சா கடத்தலை, தங்கராஜ் ஒருங்கிணைத்ததாக அவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதையடுத்து அவர் கைதாகி 9 ஆண்டுகளாக சிறையிருந்தார்.

இந்நிலையில் கஞ்சா கடத்தல் வழக்கில் சிங்கப்பூர் வாழ் தமிழரான தங்கராஜ் சுப்பையா (46), சாங்கி சிறையில் இன்று அதிகாலை தூக்கிலிடப்பட்டார். மனித உரிமை ஆர்வலர்கள், ஐரோப்பிய கூட்டமைப்பு குழு என பல தரப்பில் இருந்தும் தூக்கு தண்டனையை குறைக்க விடுக்கப்பட்ட கோரிக்கையை சிங்கப்பூர் அரசு நிராகரித்தது. 2018-ம் ஆண்டு தங்கராஜூ சுப்பையா குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு எதிராக அவரது குடும்பத்தினர் செய்த கடைசி நேர மேல் முறையீடுகளை சிங்கப்பூர் நீதிமன்றங்கள் நிராகரித்து விட்டன.

இதேபோல் மரண தண்டனை வேண்டாம் என்று ஐ.நா. முன்வைத்த  வேண்டுகோள்களையும் சிங்கப்பூர் அரசு புறந்தள்ளிவிட்டது. தூக்குத்தண்டனை நிறைவேற்றத்தை முன்னிட்டு, சாங்கி நகரின் கிழக்கில் உள்ள சிறையில் தங்கராஜ் சுப்பையாவின் உறவினர்கள் திரண்டு கதறி அழுதனர்.

MUST READ