கனடாவில் மேலும் ஒரு காலிஸ்தான் தீவிரவாதி சுட்டுக்கொலை
கனடாவில் என்.ஐ.ஏ. தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் உள்ள காலிஸ்தான் தீவிரவாதி சுக்தூல் சிங் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
கனடாவை சேர்ந்த சீக்கிய தலைவர் ஹர்திப் சிங் நிஜ்ஜர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் மோடி அரசிற்கு சம்மந்தம் உள்ளது் என குற்றஞ்சாட்டிய கனடா, இந்திய தூதரை வெளியேற்றியது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவை “வடகொரியா” வைப் போல ஒரு முரட்டு நாடாக மாற்றுகிறார் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டியிருந்தார். இந்தியாவில் ஜனநாயகம் முற்றிலும் அழிந்து விட்டதாக குற்றஞ்சாட்டிய ஜஸ்டின் ட்ரூடோ, இந்திய தூதரை வெளியேற்றி வர்த்தக ஒப்பந்தத்தையும் ரத்து செய்தது. இந்திய தூதரக அதிகாரியை கனடா வெளியேற்றியதற்கு பதிலடியாக கனடா தூதரக அதிகாரியை வெளியேற்றியது இந்தியா.
இந்தியா- கனடா இடையேயான உறவில் விரிசல் அடைந்துள்ள நிலையில் கனடாவில் மேலும் ஒரு காலிஸ்தான் தீவிரவாதி சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். என்.ஐ.ஏ. தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் உள்ள காலிஸ்தான் தீவிரவாதி சுக்தூல் சிங் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். சுக்தூல் சிங் மீது இந்தியாவில் 18 வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஏற்கனவே ஹர்தீப்சிங் நிஜார் கொலையில் இந்தியா மீது கனடா பிரதமர் குற்றம் சுமத்தியதால், இருநாடுகளிடையே பதற்றம் அதிகரித்தது. கனடாவுக்கு பயணம் செய்வோர் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்திய இந்தியாவ் இந்தியாவின் எச்சரிக்கையை நிராகரித்துள்ளது கனடா அரசு. கனடா மிகவும் பாதுகாப்பான நாடு எனக் கூறி அந்நாட்டு அமைச்சர் டோமினிக் நிராகரித்துள்ளார். இதனிடையே கனடா நாட்டை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்க இந்தியா இடைக்கால தடை விதித்துள்ளது.
இந்தியா வரும் கனடா நாட்டினருக்கான, விசா சேவையை நிறுத்தியது மத்திய அரசு. நிர்வாக காரணங்களுக்காக, விசா சேவை நிறுத்தப்படுவதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.