இந்தியா உள்பட உலகம் முழுவதும் உள்ள ஆப்பிள் ஐபோன் பயனாளர்களுக்கு புதிய ஸ்பைவேர் தாக்குதல் குறித்த எச்சரிக்கை தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
“கோவையில் என்.ஐ.ஏ. கிளை, காமராஜர் உணவகங்கள்…”- வாக்குறுதிகளை அள்ளி வீசிய அண்ணாமலை!
ஆப்பிள் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் மற்றும் குறுந்தகவல் மூலம் இந்த எச்சரிக்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த செய்தியில், தொலைத்தூரத்தில் இருந்தே ஐபோனில் ஊடுருவ கூலிப்படை ஒன்று முயற்சிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபோன் மேம்பாட்டிற்காக அனுப்பப்பட்ட அப்டேட்களை மேற்கொள்ளுமாறும் லாக்டவுன் மோடினை ஆன் செய்ய வேண்டும் ஆப்பிள் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
இந்த தாக்குதல் எங்கிருந்து நிகழ்த்தப்படுகிறது என்பது குறித்த தகவலைக் கொடுக்க ஆப்பிள் நிறுவனம் மறுத்துவிட்டது. உலகளவில் கோடிக்கணக்கான பேர் ஆப்பிள் ஐபோன்களைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆப்பிள் ஐபோன்களைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், இதுபோன்ற ஸ்பைவேர் தாக்குதல்கள் பயனர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.