Homeசெய்திகள்உலகம்பறவைக் காய்ச்சல் பெருந்தொற்றாக உருவெடுக்கலாம் - அமெரிக்க சுகாதார நிபுணர்கள்

பறவைக் காய்ச்சல் பெருந்தொற்றாக உருவெடுக்கலாம் – அமெரிக்க சுகாதார நிபுணர்கள்

-

பறவைக் காய்ச்சல் பெருந்தொற்றாக உருவெடுக்கலாம் என அமெரிக்க சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

பறவைக் காய்ச்சல் பெருந்தொற்றாக உருவெடுக்கலாம் - அமெரிக்க சுகாதார நிபுணர்கள்

கொரோனா பெருந்தொற்றை விட மிக மோசமான நிலையை பறவை காய்ச்சல் நுண்ணுயிரி ஏற்படுத்தும் என்று அமெரிக்க சுகாதாரத்துறை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் முன்னாள் இயக்குனர் ராபர்ட் ரெட்ஃபீல்ட் புதிய உலகளாவிய தொற்று நோயாக பறவை காய்ச்சல் மாற கூடும் என்று தெரிவித்துள்ளார்.

பறவைக் காய்ச்சல் பெருந்தொற்றாக உருவெடுக்கலாம் - அமெரிக்க சுகாதார நிபுணர்கள்

மெக்சிகோவில் பறவை காய்ச்சலால் ஏற்பட்ட முதல் மனித மரணம் குறித்து உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா முழுவதும் கால்நடைகளில் பறவை காய்ச்சல் வைரஸ் கண்டறியப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி உள்ள ராபர்ட் கோவிட்-19 உடன் ஒப்பிடும்போது பறவை காய்ச்சலால் ஏற்படும் இறப்பு விகிதம் மிக அதிகமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

பறவைக் காய்ச்சல் பெருந்தொற்றாக உருவெடுக்கலாம் - அமெரிக்க சுகாதார நிபுணர்கள்

அமெரிக்க பண்ணைகளில் கோழிகள் மற்றும் பசுக்களுக்கு பறவை காய்ச்சல் பரவி இருப்பதையும் பசும்பாலில் H5N1 வைரஸ் கண்டறியப்பட்டதை நிபுணர்கள் உறுதி செய்திருப்பதையும் அவர் அடிக்கோடிட்டுள்ளார்.

தொடர் மழையால் சிக்கிமில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு (apcnewstamil.com)

இந்த அடையாளங்கள் பறவை காய்ச்சலை தடுத்து நிறுத்த வேண்டிய அவசியத்தை உலக நாடுகளுக்கு உணர்த்துவதாகவும் அமெரிக்க சுகாதார வல்லுனர்கள் கூறியுள்ளனர்.

MUST READ