Homeசெய்திகள்உலகம்பணிநீக்க நடவடிக்கையில் இறங்கிய Boeing - ஊழியர்கள் அதிர்ச்சி!

பணிநீக்க நடவடிக்கையில் இறங்கிய Boeing – ஊழியர்கள் அதிர்ச்சி!

-

நிதி நெருக்கடி காரணமாக உலகம் முழுவதிலும் பணிபுரியும் சுமார் 17,000 ஊழியர்களை பணிநீக்கம்  செய்ய உள்ளதாக Boeing விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

பணிநீக்க நடவடிக்கையில் இறங்கிய Boeingபோயிங் விமான தொழிற்சாலையில் நடந்து வரும் வேலைநிறுத்தத்திற்கு மத்தியில், 17 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

உலகின் முன்னணி விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் நிறுவனத்தில் ஒன்றரை லட்சம் பேர் வேலை பார்க்கின்றனர். போயிங் தயாரிக்கும் விமானங்களை உலகளவில் பல்வேறு நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன. இந்நிறுவன தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவது தொடர்பாக, நிறுவனத்துக்கும் தொழிற்சங்கத்தினருக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தியதில் எந்த ஒரு முடிவும் எடுக்க வில்லை.

அடுத்த நான்கு ஆண்டுக்கு 25 சதவீத சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்ற தொழிலாளர்களின் கோரிக்கையை நிறுவனம் ஏற்றுக் கொள்ள வில்லை. இந்நிலையில், 33 ஆயிரம் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் விளைவாக போயிங் பங்குகள் 1.7% சரிந்தன. பின்னர் நிறுவனத்துக்கு தினமும் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.

நிதி இழப்பை சரி செய்ய, 17 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய நிறுவனம் திட்டமிட்டது. ஏற்கனவே இது தொடர்பாக போயிங் தொழிற்சாலை தலைமை நிர்வாக அதிகாரி கெல்லி ஆர்ட்பெர்க் ஊழியர்களுக்கு அளித்த செய்தி குறிப்பில், ” தொழிலாளர்கள் தொடர்ச்சியான வேலை நிறுத்தத்திற்குப் பிறகு, நிறுவனம் தனது 737 MAX, 767 மற்றும் 777 ஜெட் விமானங்களின் உற்பத்தியை ஒரு வருடம் தாமதப்படுத்துகிறது. வருவாய் இழப்பு அதிகரித்துள்ளது. நிதி இழப்பை சரி செய்ய பணியாளர்களை குறைக்க வேண்டும். வரும் மாதங்களில், எங்கள் மொத்த பணியாளர்களின் அளவை தோராயமாக 10 சதவிகிதம் குறைக்க திட்டமிட்டுள்ளோம். இந்த குறைப்புகளில் நிர்வாகிகள், மேலாளர்கள், தொழிலாளர்கள் அடங்குவர் ” என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நிதி நெருக்கடி காரணமாக உலகம் முழுவதிலும் பணிபுரியும் சுமார் 17,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக Boeing விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த வாரத்தில் அமெரிக்க ஊழியர்கள்  NOTICE பெறுவர் எனவும் நிறுவனத்தின் விதிமுறைகளின்படி அவர்களுக்கு 60 நாட்கள்  NOTICE PERIOD அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

விவாகரத்து வழக்கு: ஜெயம் ரவி – மனைவி ஆர்த்தி இடையே சமரச பேச்சு நடத்த நீதிமன்றம் உத்தரவு!

 

 

MUST READ