Homeசெய்திகள்உலகம்"சாமானிய பெண்ணை மணந்த இளவரசர்"- எங்கு தெரியுமா?

“சாமானிய பெண்ணை மணந்த இளவரசர்”- எங்கு தெரியுமா?

-

- Advertisement -

 

"சாமானிய பெண்ணை மணந்த இளவரசர்"- எங்கு தெரியுமா?

சாமானிய பெண்ணை காதல் செய்து புரூணை இளவரசர் அப்துல் மாதீன், உலகின் கவனத்தை தன பக்கம் ஈர்த்துள்ளார். உலகின் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னரும், மிகப்பெரிய செல்வந்தருமான சுல்தான் அசனின் 10-வது குழந்தை தான் இளவரசர் அப்துல் மாதீன். இவர் பெரும்பாலும் இங்கிலாந்து இளவரசர் ஹாரி உடன் ஒப்பிடப்படுவார்.

அடித்து நொறுக்கும் ‘கேப்டன் மில்லர்’…. முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

இதற்கு காரணம், இளவரசர் மாதீனும் ஹெலிகாப்டர் பைலட்டாக புரூணை விமானப் படையில் பணியாற்றி வருகிறார். பிரிட்டனின் ராயல் மிலிட்டரி அகாடமியில் பட்டம் வென்றவர். அத்துடன், தென் கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் புரூணை நாட்டிற்காக போலோ விளையாட்டிலும் களம் கண்டவர் தான் புரூணை இளவரசர்.

இந்த நிலையில் தான் காதலித்து சாமானிய பெண்ணை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். 32 வயதான இளவரசர் அப்துல் மாதீன், 29 வயதான தனது காதலி அனிஷா ரோஸ்னாவை கரம் பிடித்துள்ளார். காதலி அனிஷா ரோஸ்னாவை மசூதியில் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்துக் கொண்டார்.

விமல் நடிப்பில் உருவாகும் தேசிங்கு ராஜா 2….அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. திருமணம் நிகழ்ச்சிகள் சுமார் 1,788 அறைகள் கொண்ட அரண்மனையில் கடந்த ஜனவரி 06- ஆம் தேதி தொடங்கியது. வரும் ஜனவரி 16- ஆம் தேதி வரை நடைபெறும் அரச குடும்ப திருமண நிகழ்ச்சியின் உச்சமாக மிக பிரம்மாண்ட அளவில் கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

MUST READ