கனடாவின் டொரண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விமானம் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
மினியாபோலிஸிலிருந்து கனடாவின் ரொடாண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்திற்கு டெல்டா ஏர்லைன்ஸ் பயனிகள் விமானம் வந்துள்ளது. டொராண்டோ பியர்சன் விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது, பனிப்புயலில் சிக்கி விமான தலைக்கீழாக கவிந்தது. துரிதமாக மீட்பு பணிகள் தொடங்கப்பட்டு பயணிகள் உடனடியாக மீட்கப்பட்டனர். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 80க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் பணியாளர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 18 பேர் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் பனி மூடிய ஓடுபாதையில் விமானம் உரசி தீப்பிடித்த காட்சிகள் மற்றும் விமானம் விபத்துக்குள்ளாகி தலைக்குப்புற கவிழ்ந்த புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது.
Here is a video of the Delta Airlines CRJ-900 jet upside-down as emergency response workers attend.#Canada#Toronto pic.twitter.com/itboKBGzjJ
— No Context_SADC (@NoContextSadc) February 17, 2025