Homeசெய்திகள்உலகம்உலக அளவில் தங்கத்தின் விலை உயர்வுக்கு சீனாவே காரணம்

உலக அளவில் தங்கத்தின் விலை உயர்வுக்கு சீனாவே காரணம்

-

சீனாவில் ரியல் எஸ்டேட் மற்றும் பங்குச்சந்தை முதலீடுகள் மீதான நம்பிக்கை குறைந்து விட்டதால் சீன நுகர்வோர் தங்கத்தை வாங்கி குவிக்க தொடங்கியுள்ளனர். இதுவே உலக அளவில் தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

உலக அளவில் தங்கத்தின் விலை உயர்வுக்கு சீனாவே காரணம்

புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி காலங்களில் பாதுகாப்பான முதலீடாக கருதப்படுவது தங்கம் தான். உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு மற்றும் காஸாவில் நடக்கும் போர் காரணமாக தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.

மேலும் சீனாவில் ரியல் எஸ்டேட் மற்றும் பங்குச்சந்தை முதலீடுகள் மீதான நம்பிக்கை குறைந்து வருவதாலும் சீன மக்கள் தங்கத்தை வாங்கி குவிக்க தொடங்கியுள்ளனர். சீன மக்கள் மட்டும் இன்றி சீன மத்திய வங்கியும் தங்கத்தை அதிக அளவில் வாங்கி இருப்பு வைக்கிறது.

உலக அளவில் தங்கத்தின் விலை உயர்வுக்கு சீனாவே காரணம்

சீனா தங்கத்தின் விலையை உயர்த்தி வருவதாக லண்டனில் உள்ள விலைமதிப்பற்ற உலோகங்கள் தகவல் தளமான MetalsDaily இன் CEO ரோஸ் நார்மன் கூறியுள்ளார்.

சீனா கோல்ட் அசோசியேஷன் நாட்டில் தங்க நுகர்வு கடந்த ஆண்டை விட முதல் காலாண்டில் 6% அதிகரித்திருப்பதாக கூறியுள்ளது.

https://www.apcnewstamil.com/news/tamilnadu-news/gold-price-hiked-by-rs-240-per-sovereign/83304

கடந்த 2021 ஆம் ஆண்டு இது 1.1 ட்ரில்லியன் ஆக இருந்த அமெரிக்க டாலர் அன்னிய செலவாணி கையிருப்பு கடந்த மார்ச்சில் 775 பில்லியன் அமெரிக்க டாலர்களாக குறைந்த இருப்பதாகவும் இதற்கு சீனாவின் தங்க முதலீடுகளே காரணம் என்றும் கூறப்படுகிறது. சந்தேகத்திற்கு இடமின்றி தற்போது சர்வதேச தங்க சந்தையில் சீனாவின் கைதான் மேலோங்கி இருப்பதாக தெரியவந்துள்ளது.

MUST READ