Homeசெய்திகள்உலகம்சீனாவின் கணினி Lenovo விற்பனை சரிவு: இந்தியர்கள் புறக்கணிப்பது ஏன்?

சீனாவின் கணினி Lenovo விற்பனை சரிவு: இந்தியர்கள் புறக்கணிப்பது ஏன்?

-

சீன கணினி, லேப்டாப் தயாரிப்பு நிறுவனமான லெனோவா இந்தியாவில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இந்தியாவில் லெனோவாவின் விற்பனை மீண்டும் சரிவை சந்தித்துள்ளது. லெனோவாவின் விற்பனை தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக குறைந்துள்ளது.

ஆண்டுக்கு ஆண்டு நிறுவனத்தின் மொத்த வருமானத்தில் 14 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வருவாய் ரூ.10,847 கோடியாக மாறியுள்ளது. 2023 நிதியாண்டில் நிறுவனத்தின் விற்பனையில் 12 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது. நிகர லாபத்தில் 45 சதவீதம் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.

பொருளாதார ஸ்திரமின்மை காரணமாக லெனோவா விற்பனையில் சரிவை பதிவு செய்து வருவதாக அறிக்கை கூறுகிறது. மேலும், சப்ளை செயின் பிரச்சனைகள் மற்றும் பணவீக்கம் காரணமாக, லெனோவாவின் வருவாய் குறைந்து வருகிறது. இருப்பினும், நிறுவனத்தின் நிதி செயல்திறன் குறித்து எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

ஐடிசி இந்தியா அறிக்கையின்படி, டெஸ்க்டாப், நோட்புக் மற்றும் பணிநிலையம் போன்ற தனிநபர் கணினி சந்தையில் ஆண்டுக்கு 6.6 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது. 2023 நிதியாண்டில் 13.9 மில்லியன் யூனிட்கள் விற்கவில்லை.

2024 முதல் காலாண்டில், மேலும் 7.1 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. ஹெச்பியின் சந்தைப் பங்கு 31.7 சதவீதமாக உள்ளது.

MUST READ