Homeசெய்திகள்உலகம்பாலியல் வழக்கில் கோகோ கோலா நிறுவன வாரிசுக்கு ரூ.7,521 கோடி அபராதம்!

பாலியல் வழக்கில் கோகோ கோலா நிறுவன வாரிசுக்கு ரூ.7,521 கோடி அபராதம்!

-

பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கோகோ கோலா நிறுவனத்தின் வாரிசான அல்கி டேவிட்சனுக்கு ரூ.7,521 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கோகோ கோலா நிறுவனத்தின் வாரிசான அல்கி டேவிட் ஹாலோகிராப் என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார். இந்த நிறுவனத்தில் ஜேன் டோ என்ற பெண் மாடலாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், அல்கி டேவிட் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஹாலோகிராம் நிறுவனத்தில் பணியாற்றிய 3 வருடங்களில் தன்னை பலமுறை அல்கி டேவிட் பாலியல் வன்கொடுமை செய்ததாக தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அல்கி டேவிட் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார்.

இந்த வழக்கு லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதில் பாதிக்கப்பட்ட பெண்ணான ஜென் டோவுக்கு அல்கி டேவிட் 900 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.7,521 கோடி ஆகும். இது தொடர்பாக அல்கி டேவிட்டின் வழக்கறிஞர் கூறும் போது, பாலியல் வன்கொடுமை வழக்கின் வரலாற்றில் மிகப்பெரிய தீர்ப்புகளில் ஒன்று இது. இவ்வளவு நஷ்ட ஈடு யாருக்கும் கொடுத்தது கிடையாது என கூறியுள்ளார்.

MUST READ