Homeசெய்திகள்உலகம்சீனாவில் கொரோனாவால் லட்சக்கணக்கானோர் செத்து மடிவார்கள்.. - எச்சரிக்கும் நிபுணர்கள்..

சீனாவில் கொரோனாவால் லட்சக்கணக்கானோர் செத்து மடிவார்கள்.. – எச்சரிக்கும் நிபுணர்கள்..

-

சீனாவில் அடுத்த 90 நாட்களில் கொரோனா தொற்றால் பல லட்சம் பேர் செத்து மடிவார்கள் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

உலல நாடுகளை 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்டி வைத்த கொரோனாவின் பிறப்பிடமே சீனா தான் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.. கொரோனா பரவல் மற்ற நாடுகளில் ஓரளவுக்கு முடிவுக்கு வந்தாலும், சீனாவில் இன்னும் முழுவதுமாக குறைந்துவிடவில்லை. மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துவிடாமல் தடுக்க அந்நாட்டு அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. ஆனால், அரசு விதித்த கட்டுப்பாடுகளுக்கு எதிராக, சீன மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால் அண்மையில் அனைத்து கட்டுப்பாடுகளையும் அரசு தளர்த்தியது.

சீனாவில் கொரோனாவால் லட்சக்கணக்கானோர் செத்து மடிவார்கள்.. - எச்சரிக்கும் நிபுணர்கள்..
கொரோனா

இதன் காரணமாக கடந்த ஒன்றரை மாதமாக பெய்ஜிங், ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. தொற்றின் பரவல் வேகம் அதிகரித்துள்ளதால், நாள்தோறும் பல ஆயிரம் பேர் மடிந்து வருகின்றனர். இந்தச் சூழலில், சீன தொற்று நோயியல் நிபுணர் ஒருவர் அதிர்ச்சி வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், “மருத்துவமனைகளில் படுக்கை வசதியின்றி நோயாளிகள் உயிருக்கு போராடி வருவது உறுதியாகி உள்ளது. பெய்ஜிங்கில் உள்ள மயானங்களில் சடலங்களை அடக்கம் செய்யும் பணி 24 மணி நேரமும் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மயானத்திலும் நாளொன்றுக்கு 2,000 சடலங்கள் கொண்டுவரப்படுகின்றன.

சீனாவில் கொரோனாவால் லட்சக்கணக்கானோர் செத்து மடிவார்கள்.. - எச்சரிக்கும் நிபுணர்கள்..
கொரோனா பாதிப்பு

ஆனால், இதனை சீன அரசு முற்றிலுமாக மறுத்து வருகிறது. கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருப்பதாக தெரிவித்துள்ளது. மறுபுரத்தில் பெய்ஜிங், ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தொற்று வேகமாக பரவுவதால் 90 நாட்களில் 87 கோடி பேர் தொற்றால் பாதிக்கப்படுவார்கள். கொரோனாவால் பல லட்சம் பேர் மடிவதையும் இந்த உலகம் பார்க்கும்” என்று எச்சரித்துள்ளனர்.

MUST READ