
இங்கிலாந்து நாட்டின் லண்டனில் இன்று (மே 06) நடைபெறும் விழாவில் அந்நாட்டின் மன்னராக சார்லஸ் முடிசூட்டிக் கொள்கிறார்.
மாவட்ட செயலாளர்களை மாற்றத் திட்டம் – எடப்பாடி பழனிசாமி அடுத்த அதிரடி
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த 2022- ஆம் ஆண்டு செப்டம்பர் 8- ஆம் தேதி தன்னுடைய 96 வயதில் காலமானார். அதைத் தொடர்ந்து, ராணி இரண்டாம் எலிசபெத்தின் மூத்த மகனும், இளவரசருமான சார்லஸ் இங்கிலாந்தின் மன்னராக அறிவிக்கப்பட்டார். எலிசபெத் மறைவுக்கு பிறகு மன்னராக சார்லஸ் அரியணை ஏறிய போதும், முடிசூட்டு விழா நடைபெறாமல் இருந்தது.
இந்த சூழலில் மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழா இன்று நடக்கும் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. கடைசியாக, ராணி இரண்டாம் எலிசபெத்தின் முடிசூட்டு விழா கடந்த 1953- ஆம் ஆண்டு பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதன் பின், 70 ஆண்டுகள் கழித்து லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் அபே தேவாலயத்தில் இன்று கோலாகலமாக நடக்கிறது.
உண்மையை உலகுக்கு எடுத்து சொன்ன ஆளுநருக்கு நன்றி – சிதம்பரம் தீட்சிதர்கள் கடிதம்
இங்கிலாந்து நாட்டின் மன்னராக சார்லஸ் இன்று முடிசூட்டவுள்ள நிலையில், அந்நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. முடிசூட்டு விழாவில் கலந்துக் கொள்ள உலக நாடுகளின் தலைவர்கள் உள்ளிட்ட 2,000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில், இந்தியா சார்பில் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்கிறார்.
முடிசூட்டு விழாவின் சுவாரஸ்யங்கள் குறித்து பார்ப்போம்!
பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து வெஸ்ட்மினிஸ்டர் அபே தேவாலயம் வரை ஊர்வலம் நடைபெறும். மன்னர் சார்லஸும், ராணி கமீலாவும் குளிர்சாதன வசதிக் கொண்ட சாரட் வண்டியில் அழைத்துச் செல்லப்படுவார்கள். 700 கால பழமையான இருக்கை பின் நின்று கேன்டர்பரி ஆர்ச் பிஷப் அரசரை அங்கீகரித்து அறிவிப்பு வெளியிடுகிறார்.

ஆர்ச் பிஷப் அறிவிப்பைத் தொடர்ந்து மக்கள் முழக்கங்களை எழுப்பியதும் ராணுவ இசைக்கருவிகள் முழங்கும். சட்டத்தையும், இங்கிலாந்து தேவாலயத்தையும் காப்பதாக மன்னர் மூன்றாம் சார்லஸ் உறுதிமொழி எடுத்துக் கொள்வார். உறுதிமொழி எடுத்துக் கொண்டதும், மன்னரின் தலை, உடல் பகுதியில் புனித எண்ணெய் தேய்த்து அபிஷேகம் நடைபெறும். மதம் மற்றும் அரச குடும்பத்தின் அதிகாரத்தை அளிக்கும் வகையில் அரச குடும்ப புனித உருண்டை அளிக்கப்படும்.
மன்னரிடம் செங்கோல் வழங்கப்பட்டு, ஆர்ச் பிஷப் மன்னரின் தலையில் புனித எட்வர்ட்டின் கிரீடத்தைச் சூட்டுவார். மன்னர் சார்லஸ் அரியணையில் அமர வைக்கப்பட்டதும், அவரது மனைவி கமீலாவுக்கும் கிரீடம் சூட்டப்படும்.
“கல்விக்காக நான் யாரிடமும் பிச்சை எடுக்க தயங்கியது கிடையாது”… நடிகர் விஷால்!
சுமார் 70 ஆண்டுகளுக்கு பிறகு முடிசூட்டு விழா நடைபெறவிருப்பதால், விழாவை நேரலையாக ஒளிபரப்பு செய்ய உலகில் உள்ள அனைத்து முன்னணி தொலைக்காட்சிகளும் லண்டன் நகரில் குவிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.