
சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது.
மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றார் சோனியா காந்தி!
கடந்த 2023- ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு பிறகு தற்போது பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 89.56 டாலரில் வர்த்தமாகிறது. இதற்கு சர்வதேச அளவில் நிலவும் போர் பதற்றங்களே முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக, ரஷ்யாவில் கச்சா எண்ணெய் உற்பத்திச் செய்யும் இடங்களில் உக்ரைன் தாக்குதல் நடத்தியது. மேலும், மத்திய- கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றமும் முக்கிய காரணங்களாகக் கூறப்படுகிறது.
மேலும் உற்பத்தி குறைப்பு தொடர்பான நடவடிக்கைகளில் எந்த மாற்றமும் இல்லை என்று எண்ணெய் வள நாடுகளின் கூட்டமைப்பான ஒபக் தெரிவித்துள்ளது. இதுவும் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கக் காரணமாகக் கூறப்படுகிறது. ஒரு மாதத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் சுமார் 10 டாலர் அளவில் அதிகரித்துள்ளது.
கனரா வங்கியின் அதிரடி அறிவிப்பால்….வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!
பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்யும் முக்கிய காரணிகளில் கச்சா எண்ணெய் விலையும் உள்ளது என்பது கவனிக்கத்தக்கது.