Homeசெய்திகள்உலகம்புதனில் வைரம் - ஆய்வில் பகீர் தகவல்!

புதனில் வைரம் – ஆய்வில் பகீர் தகவல்!

-

புதனில் வைரம் அதிக அளவில் இருக்க வாய்ப்புள்ளதாக சீன மற்றும் பெல்ஜியம் விஞ்ஞானிகள் பகீர் தகவல்.

கடந்த ஜனவரி 2024 -ல் பூமிக்கு அருகில் உள்ள கிரகத்தில் புதையல் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர் எனவும் இந்த கிரகத்தில் அதிக அளவு வைர படிவுகள் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதான செய்திகள் வெளியாகின. அதனை அடுத்து தற்போது பால்வெளி மண்டலத்தில் சூரிய குடும்பத்தில் பூமிக்கு மிக அருகில் முதலாவதாக உள்ள கோள் புதன் கிரகத்தில் விலையுயர்ந்த கற்கள் என சொல்லப்படும் வைரம் அதிக அளவில் இருக்க வாய்ப்புள்ளதாக சீன மற்றும் பெல்ஜியம் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

சீனா மற்றும் பெல்ஜியம் நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் புதன்கிரகத்தில் படிந்துள்ள வைரங்கள் குறித்த ஆய்வை மேற்கொண்டனர். இந்த ஆய்வு குறித்த அறிக்கையை ‘நேச்சர் கம்யூனிகேஷன்ஸ்’ என்ற அறிவியல் இதழ் வெளியிட்டுள்ளது.
அந்த வகையில் புதன் கிரகத்தில் மேற்பரப்பில் கார்பன், சிலிக்கா மற்றும் இரும்பு போன்ற கலவைகள் இருப்பது தெரியவந்துள்ளது. அத்துடன் இவற்றுக்கு அடியில் வைர அடுக்குகள் இருக்க வாய்ப்பு உள்ளதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

புதனில் வைரம் - ஆய்வில் பகீர் தகவல்!

மேலும் இது 9 மைல் (14 கி.மீ.) தடிமனில் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து அதீத வெப்பநிலை மற்றும் அழுத்தம் காரணமாக தரைப்பரப்புக்கு கீழே உள்ள கார்பன், வைரக்கட்டிகளாக மாறி இருக்கலாம் எனவும், புதன் கிரகம் சூரியனுக்கு மிக அருகில் இருப்பதால், அதில் உள்ள கார்பன், சிலிக்கா, வைரம் ஆகியவை உருகிய நிலையில் இருக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு சேலத்தில் நடைபெற உள்ளதாக தகவல்

இருப்பினும் சுலபமாக அங்குள்ள வைரத்தை வெட்டி எடுக்க சாத்தியக்கூறுகள் இல்லை எனவும் புதன் கிரகத்தின் காந்தப்புலம் அல்லது புவியியல் கட்டமைப்புகள் குறித்து தெரிந்துகொள்ள இது மிகவும் உதவிகரமாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

MUST READ