சமூக வலைத்தளம் மூலம் விவாகரத்து அறிவித்த துபாய் இளவரசி , வைரலாகும் பதிவு.
துபாய் ஆட்சியாளரின் மகளான ஷைக்கா மஹ்ரா தனது கணவர் ஷேக் மனா பின் முகமது – ஐ இன்ஸ்டாகிராமில் விவாகரத்து செய்வதாக பகிரங்கமாக அறிவித்திருக்கிறார்.
ஷைக்கா மஹ்ரா பின்த் முகமது பின் ரஷித் அல் மக்தூம் மற்றும் ஷேக் மனா பின் முகமது பின் ரஷித் பின் மனா அல் மக்தூம் ஆகிய இருவரும் கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் செய்து கொண்டுள்ளனர். 12 மாதங்களுக்குப் பிறகு அவர்கள் தங்கள் மகளை வரவேற்றனர். அவர்களது முதல் குழந்தையை வரவேற்ற இரண்டு மாதங்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
விவாகரத்து குறித்து ஷைக்கா மஹ்ரா அவரது இன்ஸ்டாரகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது ,”அன்புள்ள கணவரே.. உங்களுக்கு வேறொரு துணை கிடைத்துவிட்டதால் நம் விவாகரத்தை நான் இதன் மூலம் அறிவிக்கிறேன். நான் உங்களை விவாகரத்து செய்கிறேன், நான் உங்களை விவாகரத்து செய்கிறேன், நான் உங்களை விவாகரத்து செய்கிறேன். பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் முன்னாள் மனைவி.” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்
இந்த ஜோடி இன்ஸ்டாகிராமில் ஒருவரையொருவர் பின்தொடர்வது (FOLLOW) மற்றும் அவர்களின் இன்ஸ்டாகிராம் PROFILE-லில் இருந்து இருவரும் இவர்கள் தொடர்புடைய அனைத்து புகைப்படங்களையும் நீக்கி இருக்கின்றனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலையில் சிக்கும் பிரபல ரவுடி – வியாசர்பாடி நாகேந்திரன்
“இது ஒரு மோசமான செய்தி. கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்” என்று ஒரு பயனர் பதிவின் கீழ் கருத்து தெரிவித்துள்ளார். மற்றொருவர், “உங்களின் முடிவுக்காக பெருமைப்படுகிறேன்” என்றார்.
ஷைக்கா மஹ்ரா ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துணை அதிபர் மற்றும் பிரதமர் மற்றும் துபாய் ஆட்சியாளரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.