Homeசெய்திகள்உலகம்துபாய் நூலகத்தில் "Why Bharat Matters" புத்தகம் வெளியீடு: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

துபாய் நூலகத்தில் “Why Bharat Matters” புத்தகம் வெளியீடு: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

-

- Advertisement -

அரசு முறை பயணமாக மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் துபாய் சென்றிருக்கிறார். அங்குள்ள நூலகத்தில் “ஒய் பாரத் மேட்டர்ஸ்” என்ற புத்தகத்தை அவர் வெளியிட்டுள்ளார்.

துபாய் நூலகத்தில் "Why Bharat Matters" புத்தகம் வெளியீடு: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்அரசு முறை பயணமாக மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் துபாய் சென்றிருக்கிறார்.  அவர் தூபாயின் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள முகமது பின் ரஷீத் நூலகத்தில் நேற்று தனது “ஒய் பாரத் மேட்டர்ஸ்” என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.

நிகழ்வின் போது, ​​டாக்டர் ஜெய்சங்கர் தனது புத்தகத்தின் கருப்பொருள்கள் மற்றும் முக்கிய கருத்துகளை விளக்கி உள்ளார்.  இது உலகில் இந்தியாவின் நிலையை வடிவமைக்கும் உலகளாவிய மற்றும் உள்நாட்டு காரணிகளை பற்றிய நூல் என தெரிவித்துள்ளார்.

துபாய் நூலகத்தில் "Why Bharat Matters" புத்தகம் வெளியீடு: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

மேலும் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசியபோது, ”இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையே பல ஆண்டு நல்லுறவு உள்ளது. 1972 ஆம் ஆண்டு இருநாடுகள் இடையேயும் நட்புறவு ஏற்பட்டதன் வெளிப்பாடாக 1972 ஆம் ஆண்டு இந்தியாவில், அந்நாட்டுக்கான தூதரகமும், 1973 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தியாவுக்கான தூதரமும் அமைக்கப்பட்டுள்ளது ”என்றார்.

என் அப்பாவின் புகழ் எனக்கு சுமையாக இருக்கிறது….. கமல் குறித்து ஸ்ருதிஹாசன்!

MUST READ