Homeசெய்திகள்உலகம்டிரம்பிற்கு நிதி அளித்த எலான் மஸ்க்

டிரம்பிற்கு நிதி அளித்த எலான் மஸ்க்

-

அமெரிக்காவில் வரும் நவம்பரில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. டொனால்ட் டிரம்பிற்கு நிதி அளித்த எலான் மஸ்க்..

டிரம்பிற்கு நிதி அளித்த எலான் மஸ்க்முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது சமீபத்திய மறுதேர்தல் பிரச்சாரத்திற்கான நிதி சேகரிப்பு குறித்து விவாதிப்பதற்காக வார இறுதியில் புளோரிடாவில் கோடீஸ்வர தொழிலதிபர் எலோன் மஸ்க்கை சந்தித்தார் என்று தி நியூயார்க் டைம்ஸ் செவ்வாயன்று தெரிவித்தது.

இந்நிலையில் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை பாம் பீச்சில் மஸ்க் மற்றும் சில பணக்கார குடியரசுக் கட்சி நன்கொடையாளர்களை சந்தித்தார்.

டிரம்பிற்கு நிதி அளித்த எலான் மஸ்க்டொனால்ட் டிரம்பிற்கும், ஜோ பைடனுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், டிரம்பை தேர்ந்தெடுக்க தீவிரமாக வேலை செய்யும் America PAC குழுவிற்கு பெரும் தொழிலதிபர் எலான் மஸ்க் நிதியளித்துள்ளது பேசுபொருளாகியுள்ளது.

முன்பு தன்னை அரசியல் சார்பற்றவர் என கூறிய மஸ்க், தற்போது டிரம்பை அதிபராக்க நிதி அளித்திருப்பது சர்ச்சையாகியுள்ளது.

MUST READ