Homeசெய்திகள்உலகம்சிலிக்கான் வேலி வங்கியை வாங்குகிறாரா எலான் மஸ்க்?

சிலிக்கான் வேலி வங்கியை வாங்குகிறாரா எலான் மஸ்க்?

-

சிலிக்கான் வேலி வங்கியை வாங்குகிறாரா எலான் மஸ்க்?

திவால் ஆகும் நிலையில் உள்ள அமெரிக்காவின் சிலிக்கான் வேலி வங்கியை, எலான் மஸ்க் வாங்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கலிபோர்னியாவில் 40 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த சிலிக்கான் வேலி வங்கியின் சொத்து மதிப்பு கடந்த 2 ஆண்டுகளாக அளப்பெரிய வளர்ச்சியை கண்டது. ஆனால் கொரோனாவுக்கு பிந்தைய பணவீக்கத்தை காரணம் காட்டி அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியது. இதனால், சிலிக்கான் வேலி வங்கி நஷ்டத்தை எதிர்கொள்ளவே, அதன் பங்கு முதலீட்டாளர்கள் வெளியேறி, வங்கியின் 80 சதவீத பங்குகள் சரிவை கண்டன. நிலைமையை சமாளிக்க சிலிக்கான் வேலி வங்கி மூடப்படுவதாக அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இந்தநிலையில் நஷ்டத்தில் தள்ளாடும் இந்த வங்கியை எலான் மஸ்க் வாங்கிக்கொண்டு, அதனை டிஜிட்டல் வங்கியாக மாற்றிக்கொள்ளும்படி, ரேசர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மின் லியாங் டான் ஆலோசனை வழங்கியிருக்கிறார். டிவிட்டரில் அவரது இந்த பதிவை பார்த்த எலான் மஸ்க்கும், யோசனையை வரவேற்பதாக குறிப்பிட்டிருப்பதால், எலான் மஸ்க் சிலிக்கான் வேலி வங்கியை வாங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ